- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் பட வெற்றிக்காக அந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் - படம்...

அமரன் பட வெற்றிக்காக அந்த விஷயத்தை மீண்டும் கையில் எடுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – படம் நல்லா இருந்தா இது தேவை இல்லையே ப்ரோ?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றிப் படங்களை தந்து, குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றவர். அவர் நடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சாயல் இருந்தாலும், அதையும் ரசிகர்கள் மிகவும் விரும்பி ரசிக்கவே செய்கின்றனர். எனினும் மாவீரன் போன்ற வித்யாசமான கதைக்களங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவும் செய்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் காமெடி நடிப்பில் அசத்திக்கொண்டிருந்த நடிகர் சூரி, இப்போது கதாநாயகனாக மாறிவிட்டார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம்கொத்திப் பறவை, சீமராஜா, நம்மவீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றிப் படங்களாக கொடுத்த நிலையில், அவரது சில படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக மிஸ்டர் லோக்கல், டான், பிரின்ஸ், ஹீரோ சமீபத்தில் வெளியான அயலான் போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் பெரிய அளவில் 3 படங்களை நம்பியிருக்கிறார். அதில் மிக முக்கியமானது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள அமரன், அடுத்து அவர் இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் எஸ்கே 23, அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள அரசியல் படங்களை அவரது முக்கிய படங்களாக இருக்கின்றன.

இந்நிலையில், அமரன் படம் வருகிற செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த வேட்டையன், கமல் நடித்த இந்தியன் 2, விஜய் நடித்த த கோட், அஜீத் நடித்த விடாமுயற்சி, தனுஷ் நடித்த ராயன் என முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகிற நிலையில், அதன்பிறகு கடைசியாக போட்டியாக படங்கள் இல்லாத நேரத்தில் அமரன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த படங்களில், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அமரன் என்பதால், இந்த படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் குறிக்கோள். அதற்காக தமிழகத்தில் பல்வேறு ஊர்கள், முக்கிய மாநிலங்கள், சில நாடுகள் என அமரன் பட பிரமோசனுக்காக படக்குழுவினருடன் செல்ல திட்டமிட்டுள்ளார். அதற்கான பயணத் திட்டங்களை வகுத்து வருகிறார்.

சற்று முன்