- Advertisement -
Homeபொழுதுபோக்குடாஸ்மாக்கில் மது வாங்கிய பெண்கள்...நடிகை கஸ்தூரி ஆவேசம்...அப்படி என்னதான் சொன்னார்?

டாஸ்மாக்கில் மது வாங்கிய பெண்கள்…நடிகை கஸ்தூரி ஆவேசம்…அப்படி என்னதான் சொன்னார்?

- Advertisement -

மது அருந்து பழக்கம் மக்களிடையே டி, காஃபி குடிப்பதை போல மாறியுள்ளது. இன்றைய இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாகி வருகிறது. ஒரு காலத்தில் பண்டிகை காலங்களில் மட்டுமே ஒரு மகிழ்ச்சிக்காக மது அருந்திய காலம் போய், தற்போது மது அருந்தினால் தான் மகிழ்ச்சி என்ற பழக்கம் வந்துவிட்டது. இதனால் தினமும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டுகிறது. குறிப்பாக இளைஞர்கள் வரிசையில் நின்று மது வாங்கி செல்லும் காட்சிகள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் காட்டப்பட்டு வருகிறது. இதேபோல் பெண்கள் மது அருந்தும் பழக்கமும் தற்போது அதிகரித்து வருகிறது. பணக்கார பெண்கள் கிளப்புகளில் மது அருந்தும் பழக்கம் வாடிக்கையாக உள்ள நிலையில், சாமானிய பெண்களும் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடையில் சுடிதார் அணிந்த 2 இளம்பெண்கள் மதுபாட்டில்கள் வாங்கி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியை நடிகை கஸ்தூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர்களை சாடியுள்ளார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தண்ணியடி, பெண்ணே தண்ணியடி. எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி. அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும்’ என்ற வார்த்தைகளையும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர்களை வசைபாடும் வகையிலும் சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த கருத்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. நடிகை கஸ்தூரியின் இந்த பதிவை இயக்குனரும், நடிகருமான நவீன் கண்டித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமானிய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு, ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு இப்படி பேசுவதை நிறுத்துங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் நடிகை கஸ்தூரியின் கருத்துக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சற்று முன்