தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு மறு பெயர் என்றால் அது சிம்புவை கூறலாம். அந்த அளவுக்கு அவர் மேலே ஊதி திணிக்கப்பட்ட சர்ச்சைகள் ஏராளம் உள்ளன. சிம்புவா அவர் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார், சிம்புவா அவர் தயாரிப்பாளர்களுக்கு இணக்கமான நடிகர் அல்ல, சிம்புவா அவர் கதாநாயகனுக்கான உடல் கட்டமைப்பில் கவனம் செலுத்த மாட்டார் என்று இங்கு ஏராளமான சர்ச்சைகள் அவரை சுத்தி பின்னப்பட்டிருக்கின்றன.
தற்போது திரைப்படங்களில் சிம்பு தீவிரமாக கவனம் செலுத்தி வரும் சூழலில், மீண்டும் ஒரு புது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது இயக்குனர் சுதா கொங்கரா அவரிடம் கதை கூறும்போது சிம்பு தூங்கி வழிந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. சுதா கொங்கரா, மணிரத்னத்திடம் சினிமா பயின்று வந்தவர். அவரின் உதவியாளராக இருந்தவர்.
துரோகி என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்திருந்த அந்த திரைப்படம், இங்கு ரிலீசானது கூட பல பேருக்கு தெரிந்திருக்காது. இந்தப் படத்திற்குப் பிறகு ஒரு பெரிய இடைவேளையை விட்ட சுதா கொங்கரா, அடுத்ததாக மாதவனை வைத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கினார்.
குத்துச்சண்டையை பிரதானப்படுத்திய திரைப்படம். அதிலும் குடிசையில் வாழும் இளம்பெண் எப்படி சாதிக்கிறாள் என்பதை குறித்த படம். தனது பயிற்சியாளரை காதலிக்கும் மதி என்னும் பெண், தக்காக வாழும் பயிற்சியாளர் என படத்தின் அத்தனை சம்பவங்களும் மிகவும் சுவாரசியமாக இருந்ததால் இறங்கி அடித்தார் சுதா கொங்கரா.
பிறகு இவர் இயக்கிய சூரரைப் போற்று திரைப்படமும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுவரை வென்ற நிலையில், ஹிந்தியிலும் இதனை ரீமேக் செய்தார் இயக்குனர். இதனையும் சூர்யாவை தயாரிக்க அக்ஷய் குமார் அதில் நடித்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது. தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் படம் இயக்குவதாக இருந்தது.
ஆனால் தற்போது அந்த பணி தள்ளிப் போய் இருக்கிறது. இந்த நிலையில் சிம்புவை வைத்து அவர் படம் இயக்க முடிவு செய்திருப்பதாகவும் இது தொடர்பான கதையை அவரிடம் கூறியதாகவும் அப்போது சிம்பு தூங்கி வழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் பாதி பொய் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதாவது இந்த சந்திப்பு நடைபெற்றது பெங்களூரில் தான் என்றும், மிகவும் சுமுகமாக இது நடைபெற்றது என்பதுதான் உண்மை எனவும் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக சுதா கொங்கரா சிம்புவை வைத்து படம் இயக்குவார் அல்லது துருவ் விக்ரமை வைத்து படம் எடுப்பார் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





