- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயின் கோட் திரைப்படம் டைம் டிராவல் கான்செப்ட்லாம் இல்லையாம்... இதுதான் கதையாம்... வெளிவந்த புதிய தகவல்...

விஜயின் கோட் திரைப்படம் டைம் டிராவல் கான்செப்ட்லாம் இல்லையாம்… இதுதான் கதையாம்… வெளிவந்த புதிய தகவல்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு விஜய் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் லைலா, பிரசாந்த், மைக் மோகன் என பலரும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதுபோக ஜெயராம், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், வி டிவி கணேஷ், யோகி பாபு, இவானா, யுகேந்திரன் என ஏராளமான நட்சத்திரங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

 

பல்வேறு நாடுகளில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாய்லாந்து, துருக்கி, ரஷ்யாவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. கோட் திரைப்படத்திலிருந்து சமீபத்தில், விசில் போடு பாடல் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த அந்தப் பாடல் போதிய அளவு வரவேற்பை பெறவில்லை.

 

இந்த நிலையில் படத்தில் ஏராளமான சுவாரசியங்களை வெங்கட் பிரபு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக நடிகை திரிஷா, இதில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற வைத்திருப்பது உறுதியாகி இருக்கிறது.

 

கிட்டத்தட்ட அவர் ஒரு நிமிடம் காட்சியில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இதேபோல் சிவகார்த்திகேயனும் படத்தில் கேமியோ ரோலில் வந்திருப்பதாக கூறுகிறார்கள். அதுபோக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் படத்தில் வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு விஜய் தான் படத்தில் இருப்பதாக நினைத்து வரும் சூழலில், விஜய் 3 கேரக்டரில் நடிப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் கசிந்தது.

 

இதனிடையே கோட் படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் சூட்டிங் ஆரம்பம் ஆனதிலிருந்து இது டைம் டிராவல் கதை தான் என்று கூறி வந்தார்கள். தற்போது அது இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது 2004 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்படும் தற்கொலை தாக்குதலில் 41 பேர் உயிர் இழக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பது தான் இந்த திரைப்படத்தின் முக்கியமான கதை கரு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் நம்பும்படியாக இல்லை என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 

சற்று முன்