ஒரு படம் நன்றாக இருந்தால் அது சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் என்ற கட்டுப்பாடுகளுக்குள் நிற்காமல் வெற்றியை மிக எளிதாக எட்டி விடுகிறது. படம் துவக்கம் முதல் இறுதிவரை படம் பார்க்கும் ரசிகர்களின் நின்றுவிட்டால் போதும். பலதரப்பு எண்ணங்கள் கொண்ட ரசிகர்களும் ஒரு படத்தை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கும் பட்சத்தில், அந்த படம நிச்சயமாக ஜனரஞ்சகமானதாக உருவாகியிருக்க வேண்டும்.
அந்த வகையில் மிகப்பெரிய வெற்றியை சமீபத்தில் பெற்ற படங்களின் வரிசையில் இருப்பது லப்பர் பந்து, அமரன் படங்கள்தான். பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லை, பெரிய விளம்பரங்கள் இல்லை. படம் நல்லா இருக்கு என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இந்த படத்தை வேற லெவலில் ஜெயிக்க வைத்தது.
அதே போல் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் உருவான அமரன் படம், பெரிய பொருட்செலவில் உருவான படம்தான். இதன் மொத்த பட்ஜெட் 120 கோடி ரூபாய். படத்தை தயாரித்தது நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம். ஆனால் படம் வெளியான 30 நாட்களில் வசூல் ரூ. 325 கோடியை கடந்திருக்கிறது.
வழக்கமாக ஒரு படம் வெளியானால் 4 வாரங்கள் அல்லது 8 வாரங்களில் படம் ரிலீஸ் செய்யப்பட வேண்டும். 4 வாரங்களுக்கு பிறகும் இடையில் ரிலீஸ் செய்யப்பட அவர்கள் ஒப்பந்தம் செய்திருந்தால் அதன்படியும் படத்தை ஓடிடி தளத்தில் வெளியீடு செய்யலாம். அந்த வகையில் ஓடிடி தளத்தில் அமரன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
அமரன் படம் தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருப்பதால், 4 வாரங்களில் அமரன் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்துவிடாதீர்கள் என்று ஏற்கனவே தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இப்போது 5வது வாரத்திலும் அமரன் தியேட்டர்களில் ஓடுகிறது.
ஆனால் வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸாகிறது. புஷ்பா படம் பெற்ற மெகாபஸ்டர் வெற்றியால், நிச்சயமாக இந்த படத்துக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் அந்த நேரத்தில் அமரன் படம் திரைகளில் ஓடுவது சாத்தியமில்லை என்ற நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் வருகிற டிசம்பர் 5ம் தேதி அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.





