- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சியின் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் மேலாளர்... 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளில்...

விடாமுயற்சியின் ரிலீஸ் தேதியை லாக் செய்த அஜித் மேலாளர்… 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாளில் ரணகளமாக போகும் திரையரங்குகள்…

- Advertisement -

விடாமுயற்சியின் திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. முதலில் விக்னேஷ் சிவனை வைத்து அஜித்தை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தது நிறுவனம். அதற்கு நடிகரும் இசைவு தெரிவிக்க இதற்கான பணிகளும் சூடு பிடித்தன. ஆனால் திடீரென விக்னேஷ் சிவனை படத்திலிருந்து அதிரடியாக நீக்கியது லைக்கா நிறுவனம்.

 

- Advertisement -

பிறகு அந்த இடத்திற்கு வந்தார் மகிழ்திருமேனி. கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாள் ஆன மே 1ஆம் தேதி இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. அதில் படத்திற்கான பெயர் விடா முயற்சி என்றும் புரியுது. ஆஹா தயாரிப்பு நிறுவனம் இவ்வளவு வேகமாக இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

 

- Advertisement -

ஆனால் அது துளி அளவும் கூட நீடிக்கவில்லை. ஏனென்றால் அன்று முதல் இன்று வரை தயாரிப்பு நிறுவனம் விடாமுயற்சி திரைப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

 

படத்தின் அறிவிப்புக்குப் பிறகு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழித்துதான் சூட்டிங்கிற்க்கே பட குழு சென்றது. ஆனால் இது பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. விடா முயற்சியில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலமாகவே இங்கு பலருக்கும் தெரிய வந்தது.

 

சரி அஜித் பிறந்தநாள் அன்றாவது ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தது லைக்கா நிறுவனம். இதற்கு இடையே அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தான், படப்பிடிப்பில் நடந்த விபத்து வீடியோவை பதிவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியான அஜித் ரசிகர்கள் இனி நாங்கள் அப்டேட் கேட்க மாட்டோம் என்று ஓடிவிட்டனர். இடையே விடாமுயற்சி படப்பிடிப்பும் நின்று போயிருந்தது.

 

இப்படியான சூழலில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளதாக அஜித்தின் மேலாளர் தெரிவித்திருக்கிறார். இதற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு பலரும் சென்றிருக்கிறார்கள். இதே போல், தீபாவளிக்கு நிச்சயமாக விடாமுயற்சி படம் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்தின் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்