தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. அவர் அப்பா எடிட்டர் மோகன், அவரது அண்ணன் மோகன் ராஜா என சினிமா பின்னணி சார்ந்த குடும்பம்தான். ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமாரும் சினிமா தயாரிப்பாளர்தான்.
ஜெயம் ரவி நடித்த பூமி, அடங்கமறு, சைரன் ஆகிய படங்களை தயாரித்தவர் சுஜாதா விஜயகுமார்தான். இப்போது ஜெயம் ரவி நடிக்க கமிட் ஆகியுள்ள சில படங்களை தயாரிப்பதும் அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார்தான். சைரன் படம் ரிலீஸ்க்கு பிறகு, தனது மருமகன் ஜெயம் ரவிக்கு. ரூ. 1.5 கோடி மதிப்பில் வாட்ச் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக, ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிய இருப்பதாக தகவல் பரவியது. கல்லூரி நாட்களில் நண்பர்களாக பழகி, பின்பு காதலர்களாகி 2009ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இருவரும் பிரிய வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டது.
ஆனால் சில தினங்களுக்கு முன், இன்ஸ்டாகிராமில் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கி இருக்கிறார் ஆர்த்தி. அதுமட்டுமின்றி சமீபகாலமாகவே ஆர்த்தி, சற்று கவர்ச்சி தூக்கலாக தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருவதும், விளம்பர படங்களில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவிக்கும், ஆர்த்தியின் பெற்றோருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனெனில் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்த 3 படங்களில் அடங்க மறு மட்டுமே வெற்றிப்படமாக இருந்தது. சைரன், பூமி ஆகிய படங்கள் தோல்வியை சந்தித்தன. அத்துடன் 15 கோடி ரூபாயாக இருந்த தனது சம்பளத்தை ரூ. 25 கோடியாக ஜெயம் ரவி சமீபத்தில் உயர்த்தியதும், அவரது படங்களை தொடர்ந்து தயாரிக்கும் மாமியார் சுஜாதாவுக்கு பிடிக்கவில்லை.
இந்த விஷயங்களை அடுத்து ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் பிரியும் முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால் பெற்றோர்கள் தரப்பில் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான முயற்சிகளையும் எடுத்து வந்தாலும், தனுஷ் – ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்குமார் – சைந்தவி வரிசையில் இந்த நட்சத்திர தம்பதி பிரிவும் உறுதியாகி விட்டது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.





