- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாடு நெருங்கும் நேரத்தில் நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு சிக்கலா?...

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் மாநாடு நெருங்கும் நேரத்தில் நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு சிக்கலா? என்ன செய்யப் போகிறார் தளபதி? – கட்சியில் ஏற்பட்ட பரபரப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், இப்போது தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச். வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் கௌதம் வாசுதேவன், பிரகாஷ்ராஜ், நரேன், பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5ம் தேதி கேரளா மாநிலம் பையனூரில் துவங்கி நடந்தது.

இதற்கிடையே நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், இந்த மாநாட்டில் தான் தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முக்கிய கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள், சட்ட திட்டங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த மாநாடு அதீத கவனம் பெற்றதாக இருக்கிறது.

அதே நேரத்தில் தற்போது மழைக்காலமாக இருப்பதால் வருகிற 27ம் தேதி மாநாடு நடக்கும் விக்கிரவாண்டி பகுதியில் மழை ஏற்பட்டால் மாநாடு பாதிக்கப்படும் என்ற அச்சமும் கட்சியினர் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, பனையூரில் உள்ள தனது தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை ஏற்றினார். இதில் கட்சி கொள்கைப் பாடலையும் வெளியிட்டார்.

- Advertisement -

விஜயின் கட்சிக் கொடி அறிமுகப்படுத்திய நாளிலேயே பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஒரு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது பகுஜன் சமாஜ் கட்சியின் கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ள நிலையில், மற்ற எந்த கட்சியிலும் தங்களது கட்சிக்கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறி தங்களது பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை, தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியிலிருந்து நீக்க வேண்டும் என்று அப்போதே அவர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அறிகுறித்து நடிகர் விஜய் தரப்பில் எந்தவித கவனமும் காண்பிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத்தலைவர் சந்தீப், தவெக கட்சியின் தலைவரான விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அந்த நோட்டீஸில் 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறியிருப்பது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விஜய் என்ன செய்கிறார் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்