- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு ஐடியாவை துணை இயக்குனர்களிடம் கூறினேன், ஆனால் அவர்களது ரியாக்‌ஷனை பார்த்து நானே அதை...

அப்படி ஒரு ஐடியாவை துணை இயக்குனர்களிடம் கூறினேன், ஆனால் அவர்களது ரியாக்‌ஷனை பார்த்து நானே அதை கைவிட்டு விட்டேன் – இயக்குனர் ஷங்கர் வேற லெவல்ல யோசிச்சிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் முக்கிய இடத்தில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனர். ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே பிரமாண்டமாக இருந்தாலும், அதில் உயிரோட்டமுள்ள கதை இருக்கும். குறிப்பாக சமூக பார்வையுள்ள படங்களை தான் அவர் தன் படங்களின் மையக்கருவாக வைத்திருப்பார்.

சிவாஜி படத்தில் கருப்பு பணப்புழக்கம், ஜெண்டில்மேன் படத்தில் கல்வி வியாபாரம், இந்தியன் படத்தில் ஊழல் லஞ்சம், முதல்வன் படம் அரசியல் தில்லுமுல்லு, அந்நியன் படத்தில் சமூக குற்றங்கள், பாய்ஸ் படத்தில் டீன்ஏஜ் காதல், இந்திரன் படத்தில் ரோபோவின் காதல் என எதை எடுத்தாலும், அதை வித்யாசமான கோணத்தில் சொல்வது அவரது பாணியாக இருக்கிறது.

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இந்தியன் 2 என்ற 2ம் பாகமாக இயக்குனர் ஷங்கர் உருவாக்கி இருக்கிறார். இந்தியன் 3 படமும் தயாரான நிலையில் வரும் 2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு அந்த படமும் திரைக்கு வர இருக்கிறது.

இயக்குனர் ஷங்கரை பொருத்த வரை எந்த நடிகராக இருந்தாலும், அவர்களை நல்ல முறையில் முழுமையாக பயன்படுத்திக் கொள்வதில் மிகுந்த திறமைசாலியாக இருந்து வருகிறார். அதனால்தான், ரஜினியை ரோபோவாக, கமலை இந்தியன் தாத்தாவாக, சியான் விக்ரமை அந்நியனாக, ஐ படத்தில் பாடி பில்டராக நடிக்க வைக்க முடிந்தது. நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை முழுமையாக வெளியே கொண்டுவரும் திறமை ஷங்கர் போன்ற சில இயக்குனர்களுக்கே அத்துப்படியாக இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படம், புகழேந்தி என்ற அந்த கேரக்டர் மறக்கவே முடியாதது. அதே போல், இந்தியன் படத்தின் கமலின் சேனாபதி கேரக்டர், சிவாஜி படத்தில் ரஜினிகாந்தின் சிவாஜி கேரக்டர் என இந்த மூன்றுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரங்களாக உள்ள நிலையில், இதுகுறித்து வித்யாசமாக யோசித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஷங்கர் கூறுகையில், கடந்த 2008ம் ஆண்டில் சிவாஜி, முதல்வன், இந்தியன் ஆகிய 3 படங்களில் வரும் ஹீரோக்களையும் ஒரே படத்தில் கொண்டு வரும் ஒரு புதிய கதையை உருவாக்க நான் யோசித்தேன். இந்த ஐடியாவை என்னுடைய துணை இயக்குனர்களிடம் சொன்னேன். இதற்கு அவர்கள் என்னை பார்த்த பார்வையில், இவன் என்ன பைத்தியக்காரனா, என்பது போல் இருந்தது. அதனால் அந்த ஐடியாவை நானே கைவிட்டு விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்