- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி அடுத்து நடிக்க உள்ள படத்தோட பேரு இதுவா? படத்தோட பட்ஜெட் ரொம்ப எகிறுதே…...

ஆர்ஜே பாலாஜி அடுத்து நடிக்க உள்ள படத்தோட பேரு இதுவா? படத்தோட பட்ஜெட் ரொம்ப எகிறுதே… படத்தோட டைரக்டர், இசையமைப்பாளர் இவங்களா? – போடு வெடிய…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆர்ஜே பாலாஜி காமெடி நடிகராக தனது பயணத்தை துவக்கினார். ஆனால் எல்கேஜி என்ற அவரது படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகன் அந்தஸ்து பெற்ற ஆர்ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ஆனால் சிங்கப்பூர் சலூன் படம் ஆர்ஜே பாலாஜிக்கு கைகொடுக்கவில்லை.

இதே நிலை நீடித்தால் மீண்டும் காமெடி நடிகராகி விட வேண்டியதுதான் என்ற சூழல் உருவான நிலையில், உடனடியாக மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை மாசாணி அம்மன் என்ற பெயரில் இயக்க திட்டமிட்டார். ஆனால் இந்த முறை நயன்தாராவுக்கு பதிலாக திரிஷாவை அம்மனாக நடிக்க வைக்கவும் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டார்.

- Advertisement -

ஆனால் இதற்கு மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இதற்கு சம்மதிக்கவில்லை. நயன்தாராவுடன் தனியாக டீல் பேசி, அவரது ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனத்தையும் சேர்த்துக்கொண்டு மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்தும் விட்டார்.

இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி, மாசாணி அம்மன் படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி, மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சித்தார்த் விஸ்வநாதன் இயக்குகிறார். இந்த படத்துக்கு சொர்க்கவாசல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தை ரூ. 16 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளனர். இதுவே ஆர்ஜே பாலாஜிக்கு முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் அவரை வைத்து இயக்கப்படும் படமாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பதாலேே இந்த படத்துக்கு இப்போதே கவனம் பெற்றுள்ளது.

பா ரஞ்சித் சாதிய படங்களை எடுப்பவர், சமுதாய ஏற்ற தாழ்வுகளை சுட்டிக்காட்டும் கதைக்களம் கொண்ட படங்களை தருபவர் என்று விமர்சிக்கப்படும் நிலையில், அவரது உதவி இயக்குனராக இருந்தவர் சொர்க்க வாசல் என்ற தலைப்பில் படம் இயக்குவதும், அதில் ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிப்பதும் பலத்த ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்