- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயம் பலருக்கும் பிடிக்காது, எனக்கும் அப்படித்தான், அதனால் 3ம் தேதி நிகழ்ச்சியில் அது இருக்காது...

அந்த விஷயம் பலருக்கும் பிடிக்காது, எனக்கும் அப்படித்தான், அதனால் 3ம் தேதி நிகழ்ச்சியில் அது இருக்காது – என்னங்க இது… தளபதி விஜய் இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் பொன்னாடை அணிவித்து, கல்வி விருது சான்றிதழும் வழங்கினார். அதே போல் இந்த ஆண்டும், அதே போல் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு, விருதுகளும் வழங்கினார்.

ஆனால் கடந்த முறை, ஒரே நாளில் அனைத்து மாவட்ட மாணவ, மாணவியருக்கும் விருதுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கிய நிலையில் அதிக நேரம் தேவைப்பட்டது. பல மணி நேரம் மேடையில் கால்கடுக்க நிற்க முடியாமல் நடிகர் விஜய் அவதிப்பட்டார். மேலும், மாணவ மாணவியர், பெற்றோர்கள் கூட்டமும் விழாவில் மிக அதிகமாக இருந்தது.

- Advertisement -

அதனால் இந்த முறை, ஜூன் 28ம் தேதி (நேற்று), ஜூலை 3ம் தேதி என 2 கட்டங்களாக இந்த விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முதல் கட்டமாக நேற்றைய விழா நடத்தப்பட்டது. இதில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்துக்கொண்டனர். அவர்களுக்கு காலை, மதியம் விருந்தும் பரிமாறப்பட்டது.

நேற்றைய விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன படிப்பை, துறையை தேர்வு செய்து படிப்பது, மாணவர்களின் அரசியல் வருகை, செய்திதாள்கள் இடம்பெறும் செய்திகள், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் என பல விஷயங்களை சுட்டிக் காட்டி பேசினார். இன்றைய நாட்டின் அவசிய தேவையாக இருப்பது நல்ல தலைவர்கள்தான் என்றும் குறிப்பிட்டார்.

- Advertisement -

மேலும் நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் மிக முக்கியம். தவறான பழக்கங்களில் உங்கள் நண்பர்கள் இருந்தால் அவர்களை திருத்துங்கள். ஆனால் நீங்களும் தவறான பழக்கங்களில் ஈடுபட்டு விடாதீர்கள். போதைப் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது எனக்கு அச்சம் தருகிறது என்றும் பல அறிவுரைகளை வழங்கிப் பேசினார்.

இந்நிலையில், நேற்றைய விழாவின் நிறைவில் பேசிய நடிகர் விஜய், வரும் 3ம் தேதி 2ம் கட்ட விழாவில் நான் சந்திக்க போகிற மாணவ, மாணவியர், பெற்றோர்களுக்கும் சேர்த்து இன்றே பேசிவிட்டேன். அப்போது அவர்களுக்கு மறுபடியும் அட்வைஸ் பண்ணி பேசி நான் போரடிக்க விரும்பவில்லை. பொதுவாக அட்வைஸ் பண்ணுவது யாருக்கும் அவ்வளவாக பிடிக்காது. எனக்கும் அப்படித்தான். அதனால் 3ம் தேதி விழாவில், நேரடியாக மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு போய்விடலாம், என்று அறிவித்துவிட்டு, நன்றி வணக்கம் சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

- Advertisement -

சற்று முன்