- Advertisement -
Homeபொழுதுபோக்குவயசு 40 ஆகப் போகுது, இன்னும் அதுபத்தி யோசிக்கவே இல்லையா? - நடிகை...

வயசு 40 ஆகப் போகுது, இன்னும் அதுபத்தி யோசிக்கவே இல்லையா? – நடிகை ஸ்ருதிஹான் சொன்ன பதிலால் நொந்து போன கமல் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். தனது 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிப்பை துவங்கியவர், இப்போது 70 வயதிலும் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்திய அளவில் ஒரு சிறந்த நடிகராக விளங்குபவர் கமல்ஹாசன்.

சமீபத்தில் உலகளவில் நடத்தப்படும் ஆஸ்கர் பட விழாவிலும் பங்கேற்க நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அந்தளவுக்கு கலைத்துறையில் கமல்ஹாசன் உச்சம் தொட்ட ஒரு கலைஞராக வலம் வருகிறார். தக்லைஃப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், அன்பறிவ் மாஸ்டர் இயக்கும் தனது 237வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

சினிமாத்துறையில் கமல்ஹாசன் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் அரசியல் வாழ்க்கையில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவருக்கு, தமிழக மக்கள் மத்தியில் போதிய ஆதரவும் வரவேற்பும் கிடைக்கவில்லை.

அதனால் தொடர்ந்து சட்டசபை தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களில் அவரது கட்சி பலத்த தோல்வியை சந்தித்தது. கோவை தெற்கு தொகுதி சட்டசபை தேர்தலிலும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் கமல் தோல்வியடைந்தார். இப்போது திமுக ஆதரவுடன் ராஜ்ய சபா எம்பி ஆக கமல் பதவி பெற்றிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருமே நடிகைகள்தான். இதில் ஸ்ருதிஹாசன் பாடகியாகவும் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள கூலி படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறார்.
கடந்த 1986ம் ஆண்டில் ஜனவரி 28ம் தேதி பிறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். வயது 39 கடந்திருக்கிறது. இன்னும் அவர் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, காதலிப்பது எனக்கு பிடித்தமான விஷயம் என்றாலும் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான நபரை நான் சந்திக்கவில்லை. திருமணம் குறித்தும் இன்னும் நான் யோசிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இல்லை என்றாலும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை அதற்கான சூழல் வந்தால் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று நடிகை ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்