- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகளுக்கு பின் திரையில் தோன்றும் பாகுபலி நாயகி அனுஷ்கா; அவர் நடித்த காதி மலையாள...

பல ஆண்டுகளுக்கு பின் திரையில் தோன்றும் பாகுபலி நாயகி அனுஷ்கா; அவர் நடித்த காதி மலையாள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – தேவசேனையை தரிசிக்க தயாராகும் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கிய ரெண்டு என்ற தமிழ் படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். ஆனால் அவர் தமிழில் அறிமுகமான இந்த படத்தில் அனுஷ்காவை ரசிகர்கள் வெகுவாக கவனிக்கவில்லை. அதன் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் அருந்ததி, தெலுங்கில் உருவாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அருந்ததி படத்தில் அனுஷ்காவின் பேரழகை பார்த்து தமிழ் ரசிகர்கள் அவரைக் கொண்டாடினார்கள். அதன் பிறகு அவருக்கு தமிழில் விஜயுடன் வேட்டைக்காரன், அஜீத்குமாருடன் பில்லா, சூர்யாவுடன் சிங்கம் 1, சிங்கம் 2, ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி, ரஜினியுடன் லிங்கா, சிம்புவுடன் வானம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அதன் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸூக்கு ஜோடியாக தேவசேனை என்ற கேரக்டரில் பாகுபலி படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். இந்த படம் பான் இந்தியா படமாக பெரிய அளவில் வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் 2 பாகங்களையும் மிக பிரமாண்டமாக இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார் இயக்குனர் ராஜமவுலி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ருத்ரமாதேவி என்ற படத்திலும் அனுஷ்கா நடித்திருந்தார்.

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிக்க, அந்த படத்தின் கேரக்டருக்காக தன் உடல் எடையை அதிகரித்தார் அனுஷ்கா. வழக்கமான அவரது எடையை விட 25 முதல் 30 கிலோ எடை அதிகரித்த நிலையில், மிக குண்டான தோற்றத்தில் மாறி இஞ்சி இடுப்பழகி படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

ஆனால் அந்த படத்தில் நடித்த பிறகு அவரது உடல் எடையை குறைக்கவே முடியவில்லை. தியானம் யோகா பயிற்சிகள் செய்தும், உணவு கட்டுப்பாடு இருந்தும், தினமும் உடற்பயிற்சிகளை கடுமையாக செய்த போதிலும் அனுஷ்கா உடல் எடை குறையாத நிலையில், ஆண்ட்டியாக இருந்ததால் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மொத்தமாக இழந்தார். இதனால் கடந்த பல ஆண்டுகளாக அவரால் சினிமாவில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. அனுஷ்கா கடைசியாக கடந்தாண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிசிட்டி என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படமும் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்ற படத்தில் கதையின் நாயகியாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மத்தியில் அதிக கவனத்தை பெற்றது. அதில் அனுஷ்கா சுருட்டு பிடித்தபடி ஒருவரின் கழுத்தை அறுக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் காதி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வருகிற 2025ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி காதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்