- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லனா நடிக்கிறதுக்கு இத்தனை கோடி சம்பளமா? ஹீரோவா நடிக்க வந்துட்டு திசை மாறிப் போன விஜய்...

வில்லனா நடிக்கிறதுக்கு இத்தனை கோடி சம்பளமா? ஹீரோவா நடிக்க வந்துட்டு திசை மாறிப் போன விஜய் சேதுபதி

- Advertisement -

விஜய் சேதுபதி சமீப காலமாக பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் அதிக வரவேற்பையும் வெற்றியையும் பெறுகிறது. ஆதலால் பல டாப் நடிகர்கள் விஜய் சேதுபதியை தங்களது திரைப்படங்களில் வில்லனாக நடிக்க வைக்க வரிசை கட்டி நிற்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். “மும்பைக்கர்”, ‘மெர்ரி கிருஸ்துமஸ்” ஆகிய பாலிவுட் திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். குறிப்பாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள “ஜவான்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் “ஜவான்” திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் சம்பளத்தை குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. “ஜவான்” திரைப்படத்தை தயாரித்தவர் ஷாருக்கான். இதில் ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, தீபிகா படுகோன், சான்யா மல்ஹோத்ரா போன்ற பலரும் நடித்துள்ளனர். குறிப்பாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“ஜவான்” திரைப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு ஷாருக்கான் ரூ. 21 கோடிகள் சம்பளமாக கொடுத்துள்ளாராம். இது தமிழ் சினிமாத்துறையினரை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இவ்வளவு தொகையை வில்லனாக நடிப்பதற்கு சம்பளமாக கொடுத்தால் இனி விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதில் ஆர்வமே காட்ட மாட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர். இனி விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மட்டுமே ஆர்வம் காட்டுவாரா? அல்லது ஹீரோவாக இனி நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்