- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய மாவீரன் படக்குழு, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

திருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய மாவீரன் படக்குழு, இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல திரைப்படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனின் “மாவீரன்” திரைப்படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

“மாவீரன்” திரைப்படத்தை இயக்கியவர் மடோன்னே அஸ்வின். இவர் “மண்டேலா” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிக பிரபலமாக அறியப்பட்டவர். “மாவீரன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் “மாவீரன்” திரைப்படத்தின் கதை திருடப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை தற்போது வெடித்துள்ளது. இயக்குனர் பிரியதர்ஷனிடம் பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பினு சுப்ரமணியன் என்பவரின் கதையை திருடித்தான் மாவீரன் படத்தை இயக்கியுள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

பினு சுப்ரமணியன் எழுதிய கதையில் ஹீரோ ஒரு எலெக்ட்ரீசியனாம். புளியந்தோப்பில் கட்டிடம் இடிந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்த கதையை அவர் எழுதியிருந்தாராம். இந்த கதையில் யோகி பாபுவை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று திட்டம் போட்ட அவர், “மண்டேலா” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரின் மூலம் யோகி பாபுவை அணுகினாராம்.

அவர் எழுதிய கதையின் Synopsis-ஐ, “மண்டேலா” படத்தின் ஒளிப்பதிவாளருக்கு அனுப்பியிருந்தாராம். யோகி பாபுவிடமும் அந்த கதையை கூறியிருக்கிறார். யோகி பாபுவுக்கும் அந்த கதை பிடித்துப்போக ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் பின் யோகி பாபுவிடம் இருந்து எந்த பதிலும் வராததால், உதவி இயக்குனர் அந்த கதையை வட நாட்டை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் கூற, அவர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் அவரை அனுப்பி வைத்தார்களாம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு அந்த கதை பிடித்துப்போக ஆர்.ஜே.பாலாஜி அல்லது சூரியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என திட்டமிட்டார்களாம். இது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் யோகி பாபுவின் மூலம் இந்த கதை மடோன்னே அஸ்வினுக்கு சென்றதாம். இந்த சம்பவத்தால் அந்த உதவி இயக்குனர் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சற்று முன்