- Advertisement -
Homeபொழுதுபோக்குஓவர் பில்டப்பு செய்தால் இப்படிதான் ஆகும், கவுண்டம்பாளையம் ஒரு உப்புமா படம், இத்தனை பேச்சு தேவையா?...

ஓவர் பில்டப்பு செய்தால் இப்படிதான் ஆகும், கவுண்டம்பாளையம் ஒரு உப்புமா படம், இத்தனை பேச்சு தேவையா? – நடிகர் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு நடிகராக 1990களில் இருந்தவர் நடிகர் ரஞ்சித். பல நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவர் நடித்த படங்களில் இவரது நடிப்பு, தனியாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, மறுமலர்ச்சி, நேசம் புதுசு, பசுபதி மே/பா ராசக்காபாளையம் உள்ளிட்ட படங்களில் ரஞ்சித் மிக சிறப்பாக நடித்திருந்தார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அரசியல் ஆர்வலராகவும் ரஞ்சித் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990களில் சிந்துநதிப்பூ படத்தில் அறிமுகமான அவர், பொன்விலங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ரஞ்சித், இப்போது அவரது டைரக்‌ஷனில் உருவாகிய படம் கவுண்டம்பாளையம். இந்த படத்தில் நாடக காதல் குறித்தும், பெற்றோர்களின் வலி குறித்தும், இளம்பெண்களின் எதிர்காலம் குறித்தும் கூறியிருப்பதாக தொடர்ந்து, பேசி வந்தார்.

நேற்று 5ம் தேதி, தமிழகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே ரஞ்சித் அறிவித்திருந்த நிலையில், இந்த படம் அறிவித்தபடி ரிலீஸ் ஆகாது என்று நேற்று முன்தினம் ( 4ம் தேதி), நடிகர் ரஞ்சித் கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்தார். மேலும் இந்த படம் ரிலீஸ் செய்வது குறித்து தமிழக முதல்வரை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றும் கூறியிருந்தார்.

கவுண்டம்பாளையம் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டால், படத்தை திரையில் ஓட விடமாட்டோம், தியேட்டர்களில் கலாட்டா செய்வோம் என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிரட்டல் வந்த நிலையில், தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி, இந்த படத்தை அறிவித்தபடி வெளியிட முடியவில்லை என்றும் நடிகர் ரஞ்சித் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சினிமா மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், கவுண்டம்பாளையம் ஒரு உப்புமா படம். இந்த படத்துக்கு போஸ்டர் கூட ஒழுங்காக டிசைன் செய்யப்படவில்லை. இது ஒரு படம், இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றே யாருக்குமே மனதில் தோன்றவில்லை. சாதி பற்றி பேசுகிறேன், நாடக காதல் பற்றி பேசுகிறேன் என்று இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார். போஸ்டரே மக்களை கவரும்படி இல்லாத போது, படம் பார்க்க யாருக்குமே தோன்றாது. சாதிய பெருமை பேசும் இதுபோன்ற படங்கள் மக்களிடம் செல்லுபடி ஆகாது, என்று விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்