- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 6 மாதங்களில் தமிழில் வெளியான படங்கள் 115, வெற்றிவாகை சூடிய படங்கள் மொத்தமே இவ்ளோதான்...

கடந்த 6 மாதங்களில் தமிழில் வெளியான படங்கள் 115, வெற்றிவாகை சூடிய படங்கள் மொத்தமே இவ்ளோதான் – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு…!

- Advertisement -

இந்திய அளவில் பேசப்படும் படங்களாக தமிழ் சினிமா படங்கள் ஒரு காலகட்டத்தில் இருந்து வந்தன. ஏனெனில் தமிழ் சினிமாவில்தான் கலாசார உணர்வுகளை வெளிப்படும் படங்கள் ஒரு காலகட்டத்தில் அதிகளவில் வெளிவந்தன. வெறும் பொழுதுபோக்கு படங்களை மட்டுமே தராமல் உணர்வு பூர்வமான படங்களை தந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருந்ததால், அத்தகைய படைப்புகள் வெளியாக, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தன.

கே பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் அந்த வரிசையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர். அந்த வரிசையில் இப்போது இயக்குனர்கள் வெற்றிமாறன், பாலா, அமீர், சேரன், தங்கர்பச்சான் போன்றவர்களும் கவனிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் அவர்களும் கூட சில நேரங்களில் கமர்ஷியல் படங்களை தருவதையும் மறுப்பதற்கில்லை.

கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் ஆறு மாதங்களில், தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் மொத்தம் 115. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் உள்ளிட்ட படங்களும் அடக்கம். இந்த 4 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.

ஆனால் அதே காலகட்டத்தில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த மலையாள படங்கள் மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரேமலு, பிரமயுகம், ஆவேசம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்கள் அனைத்துமே, உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிய படங்களாக கூறப்படுகின்றன. ஆனால் தமிழில் அந்த வெற்றியை ரசிகர்களால் எண்ணிக்கூட பார்க்க முடியாத சூழல் இருந்தது.

இந்த சூழலில்தான் சுந்தர் சியின் அரண்மனை 4, துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்த கருடன், கவின் நடித்த ஸ்டார், விஜய் சேதுபதியின் 50வது படம், நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து தமிழில் வெளியாகின. இந்த 6 மாதங்களில் மொத்தம் 115 படங்கள் வெளியான நிலையில், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்கள் இந்த 4 மட்டுமே என்பது மிகவும் கவலையுடன் குறிப்பிடத்தக்கது.

இதில் அரண்மனை 4, மகாராஜா படங்கள் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. கருடன் 60 கோடி, ஸ்டார் 25 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்துள்ளன. கேப்டன் மில்லர், அயலான் படங்களும் தலா ரூ. 75 கோடி வசூல் என்றாலும், அவை விமர்சன ரீதியாக தோல்வி படங்கள்தான். மற்றபடி லவ்வர், வடக்குப்பட்டி ராமசாமி, மிஷன் சாப்டர் 1, ப்ளு ஸ்டார் ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனம் பெற்ற படங்களாக இருந்துள்ளன. இப்படி 100க்கும் மேற்பட்ட பிளாப் ஆனதால், 500 கோடி ரூபாய் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்