- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல நாயகி, டைரக்டர் வெச்ச குறி தப்பலே -...

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பிரபல நாயகி, டைரக்டர் வெச்ச குறி தப்பலே – ரஜினி நடிக்கும் அந்த படத்தில் சான்ஸ் கிடைத்தது எப்படி?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது நடித்துவரும் வேட்டையன். இந்த படத்தை பொருத்தவரை ரஜினிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் என்று இதுவரை தெரியவில்லை. மஞ்சுவாரியார் இந்த படத்தில் நடிப்பதால் ஒருவேளை அவர் ஜோடியாக நடித்திருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன்பு வெளியான படத்தில், ரஜினிக்கு மனைவியா ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். படையப்பா படத்தில், ரஜினியை எதிர்க்கும் வில்லியாக நடித்திருந்த அவர் இந்த படத்தில் ரஜினி செய்யும் கொலைகளை பார்த்து அரண்டு போய்விடுவார்.

- Advertisement -

இப்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் இந்த படத்தை முடித்த பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ரஜினி 171 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன், ரன்வீர் கபூர் போன்றவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் உள்ளன. ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பாரா, அல்லது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிப்பாரா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. ஆனால் ஜெயிலர் 2 படம் ரஜினி 172 படமாக எடுக்கப்பட்டாலும், ரஜினி 173 படமாக எடுக்கப்பட்டாலும் அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என இப்போதே முடிவாகி விட்டது.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா கமிட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன், அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, 5வது முறையாக ஜெயிலர் 2 படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சிவாஜி படத்தில் முதல் பாட்டில் ரஜினிக்காக பல்லேலக்கா பாடலிலும் நயன்தாரா சிறப்பு நடனம் ஆடியிருந்தார்.

ஜெயிலர் 2 படத்தில் நயன்தாரா நடிக்க காரணம், இயக்குநர் நெல்சன்தான். கோலமாவு கோகிலா படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு, எப்போது கோலமாவு கோகிலா 2 இயக்கினாலும், நடிக்க கால்ஷீட் தருகிறேன் என்று நயன்தாரா நெல்சனிடம் கூறியிருந்தார். இப்போதைக்கு அந்த படம் எடுக்கும் பிளான் இல்லாததால், சூப்பர் ஸ்டாருக்கு, லேடீ சூப்பர் ஸ்டாரை ஜோடியாக்கும் பிளான் செய்து, அதில் சக்சஸ் செய்திருக்கிறார் நெல்சன். அதனால்தான். மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் சான்ஸ் நயன்தாராவுக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்