அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் விஜய், தற்போது தனது கோட் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். திரைப் பயணத்தில், இறுதிக் கட்டத்தில் இருக்கும் அவர் இதன் பிறகு, ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்க இருக்கிறார். தற்போது விஜய்க்கு கோட் திரைப்படம் 68 வது படமாக உருவாகி வருகிறது.
இதனை கல்பாத்தி அர்ச்சனாவின், ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் எடுத்து வருகிறது. ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனம் தான் பிகில் படத்தை எடுத்திருந்தது. புதிய கீதை படத்திற்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து, விஜய் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்காக ஏகப்பட்ட சுவாரசியங்களை, வெங்கட் பிரபு வைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு, வி டிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், வைபவ், ஜெயராம் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களின் நடிப்பது உறுதியாக இருக்கிறது. இதில் ஒரு விஜய் இளமையாக கட்டுவதற்காக வெளிநாடுகளில் வி எப் எக்ஸ் பணிகளை நாடி இருக்கிறார் வெங்கட் பிரபு.
தற்போது இதற்காக அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோட் திரைப்படத்திற்காக ஏராளமான சுவாரசியங்களை வெங்கட் பிரபு வைத்துள்ளார். இதில் முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள போவது, மறைந்த நடிகர் விஜயகாந்த் படத்தில் இருப்பது தான்.
ஏ ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவரை திரையில் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. இதே போல் ஒரு பாடலுக்கு த்ரிஷா வந்து போகிறார். சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குகிறார். இந்நிலையில் அவருக்கும் ஒரு சின்ன கேமியோ ரோல் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஆன பாதையை, கிளிக் செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு.
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன், கோட் படத்திற்காக நான் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அது ஒரு குத்து பாடல். மிக நன்றாக அந்த பாடல் வந்துள்ளது. நிச்சயமாக ரசிகர்கள் அதை விரும்புவார்கள். படப்பிடிப்பில் விஜய் உடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மிகவும் இனிமையான பண்பு கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.





