- Advertisement -
Homeபொழுதுபோக்கு4வது முறையாக அஜீத்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு, இயக்குனரை அழைத்து பேசிய நடிகர் அஜீத்குமார்...

4வது முறையாக அஜீத்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு, இயக்குனரை அழைத்து பேசிய நடிகர் அஜீத்குமார் – விரைவில் அறிவிப்பு வெளியாகும்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது மார்க் ஆண்டனி டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட்பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 7ம் தேதி ஐதராபாத்தில் முடிவடைந்துள்ளது.

இதையடுத்து வருகிற 20ம் தேதி முதல், பாதியில் நின்று விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார். அஜர்பைஜானில் ஷூட்டிங் நடக்கிறது. இதில் அஜீத்குமாருடன் திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

- Advertisement -

கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு, இன்னும் நிறைவடையாத நிலையில், மகிழ்திருமேனிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 40 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார் அஜீத்குமார். அந்த 40 நாட்களுக்குள் எல்லா காட்சிகளையும் முடித்துவிடுமாறும், மீண்டும் தன்னை அழைக்க வேண்டாம் என்றும் கண்டிஷனாகவே அஜீத்குமார், டைரக்டரிடம் கூறிவிட்டார்.

விடாமுயற்சி படத்தையும், குட்பேட் அக்லி படத்தையும் முடித்த பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவும் அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை ஒரு வாரத்துக்கு முன் நடந்துள்ளது. வேள்பாரி கதையை படமாக்கும் திட்டத்தில் இயக்குனர் ஷங்கர் இருப்பதால், அந்த சரித்திர கதையில் அஜீத்குமார் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய 3 படங்களை இயக்கியவர் எச் வினோத். அடுத்ததாக விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தை இயக்க கமிட் ஆகியிருக்கிறார். வரும் அக்டோபரில் பட்பபிடிப்பு துவங்க இருக்கிறது. முன்னதாக கமல் நடிக்கும் படத்தை எச் வினோத் இயக்க இருந்த நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்கு அதை கமல் தள்ளி வைத்துவிட்டார்.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன், நடிகர் அஜீத்குமார் டைரக்டர் எச் வினோத்தை அழைத்து பேசியிருக்கிறார். அப்போது விஜய் 69 படம் ஷூட்டிங் எப்போது முடியும் என்று விசாரித்த அஜீத்குமார், மீண்டும் இருவரும் இணைந்து படம் பண்ணுவோம், கதை ரெடி செய்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் ஷங்கர் படம் லேட் ஆகும் பட்சத்தில், குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு மீண்டும் எச் வினோத்துடன் அஜீத்குமார் இணைய அதிக வாய்ப்புள்ளது, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.

- Advertisement -

சற்று முன்