90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த தமன்னா, தமிழில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் “வியாபாரி”, “கல்லூரி” ஆகிய திரைப்படங்களில் நடித்த தமன்னா, இளைஞர்களின் மனம் கவர்ந்த கதாநாயகியாக உருவானார். அதனை தொடர்ந்து தமிழில் அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடனும் தெலுங்கில் பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார்.

ஒரு கட்டத்தில் தென்னிந்தியாவின் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்தார் தமன்னா. எங்கு திரும்பினாலும் தமன்னா நடித்த திரைப்படங்களே இருந்தன. சினிமாத்துறைக்கு வந்து இத்தனை வருடங்கள் ஆகியும் இப்போதும் தமன்னா பிசியான நடிகையாகவே வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. சமீபத்தில் கூட இவர் ஹிந்தியில் நடித்த “பப்ளி பவுன்சர்”, “பிளான் ஏ பிளான் பி” போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் “ஜெயிலர்”, “அரண்மனை 4” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி கதாநாயகியாக நடித்த “நவம்பர் ஸ்டோரி” என்ற வெப் சீரீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமன்னா தற்போது பாலிவுட் நடிகரான விஜய் வர்மா என்பவரை காதலித்து வருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. சமீப நாட்களாகவே இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு கூட விஜய் வர்மாவும் தமன்னாவும் இரவு பார்ட்டி ஒன்றில் முத்தம் கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது இருவரும் இரவு ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் வர்மா “பிங்க்”, “கல்லி பாய்” “சூப்பர் 30” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் “மிர்சாபூர்”, “தஹாத்” போன்ற பல பிரபலமான வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





