- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிக சம்பளம் வாங்குகிறார், தன் மீது மட்டுமே அக்கறை கொண்ட சுயநலவாதி - நடிகர் பகத்...

அதிக சம்பளம் வாங்குகிறார், தன் மீது மட்டுமே அக்கறை கொண்ட சுயநலவாதி – நடிகர் பகத் பாசிலை கடுமையாக விமர்சித்த காமெடி நடிகரால் பரபரப்பு

- Advertisement -

நடிகர் பகத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர். மலையாள பட இயக்குனர் பாசில் மகன்தான் இவர். பாசில், தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். குறிப்பாக என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவிழி வாசலிலே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, பூவே பூச்சூடவா போன்ற படங்களை இயக்கியவர் பாசில்தான்.

இயக்குனர் பாசில் மகன் பகத் பாசில், மலையாளத்தில் வெளியான பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். தனது தந்தை பாசில் சிறந்த இயக்குனராக பெயர், புகழ் பெற்றவராக உள்ள நிலையில், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்ற பழமொழிக்கு ஏற்ப, சிறந்த நடிப்பாற்றல் மிக்கவராக பாசில் இருக்கிறார். இவரது மனைவி நடிகை நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களில் நடிப்பில் பகத் பாசில் ரசிகர்களை மிரட்டி இருந்தார். வேட்டையன் படத்திலும் ரஜினிகாந்த் மகனாக முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்போதும் தமிழில் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். வில்லன் நடிப்பில் பகத் பாசில் மிகவும் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். சமீபத்தில் அவரது ஆவேசம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் போல, மலையாள திரையுலகில், நடிகர் சங்கம் அம்மா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த அம்மா சங்கத் தேர்தலில், 3வது முறையாக தலைவராக நடிகர் மோகன்லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மா சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கொச்சியில் நடந்தது. இதில் பல முன்னணி இளம் நடிகர்கள் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மலையாள காமெடி நடிகர் அனூப் சந்திரன், கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத பகத் பாசில், அவரது மனைவி நடிகை நஸ்ரியா குறித்தும் அவர் குறிப்பிட்டு விமர்சித்து பேசினார். கொச்சியில் இருக்கும் அவர்கள், கொச்சியில் நடக்கும் இந்த கூட்டத்துக்கு வரவில்லை. ஆனால் மீரா நந்தன் திருமண விழாவில் கலந்துக்கொண்டனர் என்றும் கூறினார்.

மேலும் அனூப் சந்திரன் பேசுகையில், பகத் பாசில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிட்டார். அதனால் தன்னை மட்டுமே பார்த்துக்கொள்ளும் சுயநலவாதியாகவும் மாறிவிட்டார் என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார். இது தற்போது பெரிய பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிவின் பாலி, பிருத்விராஜ், துல்கர் சல்மான் போன்ற இளம் நடிகர்கள் பலரும் அந்த கூட்டத்துக்கு வராத நிலையில், பகத் பாசிலை மட்டும் விமர்சித்து பேசியதற்கு அனூப் சந்திரனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்