- Advertisement -
தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவரை வந்த படங்களில் ஜெய்லர் 2 படம் தான் அதிக வசூல் செய்த படமாக இருக்கும். கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை எட்ட வாய்ப்பு உள்ளது என்று அவர் உறுதியாக கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜெயிலர் 2 தமிழில் மட்டுமே 300 கோடி ரூபாய் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 40 ஆண்டுகால சினிமா அனுபவம் மிக்க திருப்பூர் சுப்ரமணியம், எதையும் சரியாக கணித்து வெளிப்படையாக பேசுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.





