- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வரும் நடிகர் சூர்யா, இப்படி ஒரு அவப் பெயர்...

நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து வரும் நடிகர் சூர்யா, இப்படி ஒரு அவப் பெயர் வர யார் காரணம் தெரியுமா? – விளாசித் தள்ளிய பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுவர் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளாக கோலோச்சி வரும் அவர், தனது 73வது வயதிலும் இப்போது வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என கதாநாயகனாக பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரது கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவம் இருக்கின்றனர்.

ஏனென்றால், அவர் அந்தளவுக்கு இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை மதிக்கிறார். எந்த நேர்காணலில் பேசினாலும், எந்த மேடையில் பேசினாலும் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் எனக்கு நல்ல கேரக்டர்களை கொடுத்து நல்ல படங்களை இயக்கிய இயக்குனர்களும், அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களும்தான். இந்த உச்சத்தை நான் தொடுவதற்கு அவர்கள்தான் காரணம் என்கிறார்.

ஆனால் நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமாரின் மகனாக இருந்தும், தனக்கான வெற்றி வாய்ப்புகளை அவரே இழந்து வருகிறார். சிவக்குமார் போலவே, பெயர் சொல்லும் கலைஞராக இருக்க வேண்டியவர், ஈகோ காரணமாக, பல நல்ல படங்களில் நடிக்க மறுத்து இயக்குனர்களிடம் முரண்பட்டு வருகிறார் என்கிற தகவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வணங்கான், புறநானூறு போன்ற படங்களை அவர் இழந்ததற்கு அவரது ஈகோ தான் காரணம் என்கின்றனர்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக விஜய், அஜீத்குமார் போல நாமும் பெரிய நடிகர் என்ற எண்ணம் சூர்யாவுக்கு வந்துவிட்டது. அதன் காரணமாக இயக்குனர்கள் கவுதம் மேனன், வெற்றிமாறன், பாலா, சுதா கொங்கரா, ஹரி போன்றவர்களிடம் அவர் தனது ஈகோவை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் அந்த இயக்குனர்கள்தான், சூர்யாவுக்கு மிக நல்ல படங்களை கொடுத்து சினிமாவில் அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் என்பதை சூர்யா சுத்தமாக மறந்துவிட்டார். தனக்குத்தானே பெரிய ஆள் போல சூர்யா நினைத்துக்கொண்டு அவர்களுடன் அடிக்கடி முரண்படுகிறார். அவர்கள் சொல்லும் கதைகளில் நிறைய குறுக்கீடு, இடையூறு செய்கிறார்.

ஒரு இயக்குனர் சொல்லும் கதை, தனக்கு சரியாக வராது என்று தோன்றினால் அவரிடம் எடுத்துச் சொல்லி, அதற்கான காரணங்களை விளக்கி வேறு மாதிரியான ஒரு கதை பண்ணலாம் என்று சூர்யா கேட்கலாம். அதில்தான் நல்ல புரிதல் இயக்குனருக்கும், நடிகருக்கும் வரும். ஆனால் எல்லாவற்றிலும் நான் சொன்னபடிதான் கதை இருக்க வேண்டும், இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என்று சூர்யா சொன்னால், அவரது திரைப் பயண வளர்ச்சிக்கு அவரேதான் தடையாக இருக்கிறார், என்று கூறியிருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

சற்று முன்