- Advertisement -
Homeபொழுதுபோக்குத்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் எப்போது... அப்டேட் கொடுத்த மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்...

த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் எப்போது… அப்டேட் கொடுத்த மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்…

- Advertisement -

இந்திய சினிமாவில் திரில்லர் திரைப்படங்களுக்கு எல்லாம் மூலக்கூறு எது என்று நாம் தேடிப் பார்த்தால், கண்ணை மூடிக்கொண்டு த்ரிஷ்யம் படத்தை கூறிவிடலாம். மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் மோகன்லால். அவருக்கு மனைவியாக மீனா நடித்திருந்தார்.

 

முக்கியமாக நாம் மோகன்லால் நடிப்பை தான் கூற வேண்டும். காட்சிக்கு காட்சி பதற்றமான சூழலில் அவர் வெளிப்படுத்திய ஒவ்வொரு தருணங்களும் படத்தின் அக்மார்க்காக அமைந்தன. தனது மகளிடம், போலீஸ் அதிகாரி மகனான ஒருவன் பாலியல் சீண்டலில் ஈடுபட அவனை கொலை செய்வார் மீனா.

 

இதன் பிறகு தங்கள் குடும்பத்தை காப்பாற்ற, மோகன்லால் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தான் த்ரிஷ்யம் படத்தின் திரைக்கதை. முதல் பாதி சற்று அமைதியாக செல்லும் அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களை அனைவரையும் இருக்கையின் நுணுக்கி வரவழைக்கும்.

 

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் ரீமேக் ஆனது. ஜீத்து ஜோசப்பே இந்த திரைப்படத்தை எடுக்க, கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார். மலையாளத்தில் அங்கு மோகன்லால் தனது நடிப்பில் வெளுத்துக்கட்ட, இங்கு கமல்ஹாசனும் பட்டையை கிளப்பியிருந்தார்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. நெல்லை தமிழை உச்சரித்து அவர் நடித்த ஒவ்வொரு காட்சியும், திரையரங்குகளை கலகலப்பாக்கின. இந்த நிலையில், மலையாளத்தில் த்ரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார். பலரும் எதிர்பார்க்காத இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது.

 

 

முந்தைய திரைப்படத்தைப் போலவே முதல் பாகம் மெதுவாக நகர, இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியது. தற்போது இதன் மூன்றாம் பாகத்தை எடுக்க இயக்குனர் திட்டமிட்டு இருக்கிறார். இதன் கிளைமாக்ஸை மோகன் லாலிடம் கூற அது அவருக்கும் பிடித்து விட்டதாம். முதல் பாகம் வெளியாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தை அவர் எடுத்தார். இதனால் மூன்றாம் பாகம் எடுக்க சில காலங்கள் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்