- Advertisement -
Homeபொழுதுபோக்குரொம்பவும் வித்யாசமா சிந்திச்சா இப்படித்தான் கடைசியில் தோணும்… நான் அப்படி ஆயிட்டேனா என்று புலம்பும் நடிகர்...

ரொம்பவும் வித்யாசமா சிந்திச்சா இப்படித்தான் கடைசியில் தோணும்… நான் அப்படி ஆயிட்டேனா என்று புலம்பும் நடிகர் பார்த்திபன் – இவருக்கு என்னதான் ஆச்சு?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, இயக்குனராக இருந்து வருபவர் ஆர் பார்த்திபன். இவர் டைரக்டர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். 35 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தாவணிக் கனவுகள் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் வாய்ப்பை பார்த்திபனுக்கு பாக்யராஜ் வழங்கியிருந்தார். இந்த படத்தில் போஸ்ட்மேன் கேரக்டரில் பார்த்திபனின் நடிப்பு மிக சிறப்பாகவே இருந்தது.

அதற்குப் பிறகு 1990களில் இயக்குனர் பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமானார். அதே நேரத்தில் இந்த படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சீதாவையே, பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் – சீதா தமிழ் சினிமா நட்சத்திர தம்பதிகளில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டவர்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துக்கொண்டு பிரிந்து விட்டனர். இது தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா துறை சார்ந்தவர்களையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பதும் மறக்க முடியாதது.

இந்நிலையில் மீண்டும் சீதா, டிவி சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது திருமணமும் சீதாவுக்கு நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. ஒரே ஆண்டில் அவரது தாம்பத்ய வாழ்க்கை முடிவுக்கு வந்து அவரும் பிரிந்து சென்று விட்டார். இப்போது சீதா தனிமையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே நடிகர் பார்த்திபன், நடிகை மனைவி சீதாவை பிரிந்த நிலையிலும் தொடர்ந்து சினிமாவில் தனது முழு ஆர்வத்தை காட்டி பல படங்களில் நடிக்கவும், சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இதில் ஒத்த செருப்பு, இரவின் இரவின் நிழல் போன்ற படங்கள் பார்த்திபன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் முக்கிய படங்களாக இருந்தன. பார்த்திபன் இயக்கத்தில் டீன்ஸ் என்ற படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த படம் குறித்த பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பங்கேற்று பேசி வருகிறார்.

சமீபத்தில் டீன்ஸ் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன், சீதாவுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை, இப்போது அவருக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றம், பக்குவம் குறித்து மனம் திறந்து பேசினார். மேலும், எனக்கு ஒரு பயம் மட்டும் இப்போது இருக்கிறது. நான் மெண்டல் ஆகிட்டேனா, இல்லை ஆகப் போகிறேனா என்று தெரியவில்லை. நீங்க மெண்டல் ஹாஸ்பிடல் போய் பாருங்க, நாம அவங்கள மெண்டலா பாப்போம். ஆனால் அவங்க சந்தோஷமா இருப்பாங்க. அதே மாதிரி நானும் சந்தோஷமா தான் இருக்கேன். ஆனால் ஒருவேளை நான் மெண்டல் ஆகிட்டேனா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கு என்று பேசி இருக்கிறார் நடிகர் பார்த்திபன். வித்யாசமா சிந்திச்சு, சிந்திச்சு இப்படி ஆயிட்டாரோ என ரசிகர்கள் பார்த்திபனை கலாய்க்கின்றனர்.

சற்று முன்