ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது. இத்திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் வெளிவந்தது. ஆனால் தற்போது 4 மாதங்கள் ஆன நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.
எனினும் ஒரு வழியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முழு திரைப்படமும் துபாயில்தான் படமாக்க உள்ளார்களாம்.
அஜித்குமார் சமீபத்தில் துபாய் நகரில் சொந்தமாக ஒரு வீடு வாங்கியுள்ளாராம். அடுத்த மூன்று மாதங்கள் அந்த வீட்டில் தங்கிதான் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்குச் செல்லவுள்ளாராம்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர், இயக்குனர் போன்ற சிலர் துபாய்க்கு போயிருக்கிறார்களாம்.
அங்கே துபாயில் உள்ள பாலைவனம் ஒன்றில் ஒரு அதிரடியான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்க திட்டமிட்டு உள்ளார்களாம். இந்த முழு படத்தையும் துபாய்க்கு நகர்த்தியதற்கு காரணமே இந்த சண்டைக் காட்சியை படமாக்குவதற்காகத்தானாம்.
மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் முடிவடைந்த பிறகு வடமாநிலமான ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம்.
எனினும் ஒரு வேளை விசா பிரச்சனை வந்துவிட்டால் அந்த மொத்த சண்டைக்காட்சியையும் ராஜஸ்தான் மாநிலத்தில் படமாக்கிவிடலாம் என திட்டம் போட்டுள்ளார்களாம். படக்குழுவினர் மிகவும் மும்முரமாக “விடாமுயற்சி” படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்களாம். விரைவில் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





