நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது 69வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இது அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். வரும் நவம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இந்த படத்தில் நடிகை சமந்தா தான் கதாநாயகி என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஏனெனில் கத்தி, தெறி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களும் மெகா ஹிட் ஆகி விட்டதால், தனது கடைசி படத்திலும், சமந்தாவே கதாநாயகியாக இருக்கட்டும் என்று விஜயும் கூறியிருக்கிறார்.
எனினும் சமந்தா மயோசிடிஸ் என்னும் தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், படப்பிடிப்புகளில் கலந்துக்கொள்வதை குறைத்துக்கொண்டு இருக்கிறார். மேலும், தொடர்ந்து மருந்து மாத்திரைகள், மருத்துவ சிகிச்சை என அவர் அடிக்கடி நோய்வாய்பட்டு அவதிப்படுகிறார். எனினும் சிட்டாடல் போன்ற வெப்சீரிஸ்சில் சிரமத்தை பொருட்படுத்தாமல் நடிக்கவும் செய்கிறார்.
அதுமட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சமந்தாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நடிப்பு, அழகு இரண்டிலுமே அவர் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் தனது கடைசி படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிப்பது நன்றாக வரும் என்று விஜயும் கணக்கு போட்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விவகாரமான பதிவை செய்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகை சமந்தா. ஹைட்ரஜன் பெராக்ஸைடை சுவாசிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் சரியாகி விடும் என்று அந்த பதிவில் புகைப்படத்துடன் அவர் தகவல் வெளியிட்டிருந்தார். இது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், சமந்தா என்ன டாக்ரா, இது முற்றிலும் தவறான தகவல் என்று டாக்டர் ஒருவர் பதிவிட்டதும் வைரலானது.
இதையடுத்து, சமந்தா மீதான சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், தனது படத்தில் சமந்தா வேண்டாம் என விஜய், படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்த நயன்தாரா அல்லது காஜல் அகர்வால் இருவரில் ஒருவர் விஜய் 69ல் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் விஜய்- நயன்தாரா, விஜய் – காஜல் அகர்வால் ஜோடி பல படங்களில் வெற்றியை தந்துள்ளது. அதே நேரத்தில் திரிஷாவும் இந்த போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.





