நடிகர் கமல்ஹாசன் துவக்கத்தில் இருந்தே சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமின்றி வித்யாசமான கதைக்களங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதனால் யாரும் ஏற்க யோசிக்கிற கதாபாத்திரங்களில் கமல் துணிந்து நடிப்பார். அதில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார். சில நேரங்களில் அது வெற்றியும் தரும், பலத்த தோல்வியும் தரும்.
உதாரணமாக, 1980களில், இளம் வயதில் கோவணம் கட்டி நடித்த ஒரே நாயகன் கமல்ஹாசனாகதான் இருப்பார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில், ஒரு காட்சியில் நீ கோவணத்துடன் இந்த காட்சியில் வர வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா சொன்ன அடுத்த நிமிடமே, கோவணம் கட்டி எதிரில் நின்றிருக்கிறார் கமல்ஹாசன்.
அப்படிப்பட்ட டெடிகேஷன் நிறைந்த கமல்ஹாசன், இப்போதும் அப்படியே இருக்கிறார். இந்தியன் படத்தில் முதல் ஆளாக படப்பிடிப்பு தளத்துக்கு வந்து கடைசி ஆளாக சென்றவரும் அவர்தான். ஏனெனில் காலையில் 4 மணி நேரத்துக்கு மேல் மேக்கப் போட வேண்டும். இரவில் ஒரு மணி நேரம் மேக்கப்பை கலைக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி மேக்கப்பில் இருக்கும் 8 மணி நேரம், 10 மணி நேரம் வெறும் நீராகாரம் மட்டுமே, வாயில் ஸ்ட்ரா வழியாக எடுத்துக்கொள்ள முடியும். திட உணவுகளை சாப்பிட்டால் வாய் அசையும். முகத்தில் உள்ள மேக்கப் கலைந்துவிடும் என்பதால் ஷூட்டிங் நடந்த நாட்கள் முழுவதும் தண்ணீர், ஜூஸ் குடித்தே அப்படி ஒரு சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் கமல்ஹாசன்.
ஆனால் அப்படி ஒரு சிறப்பான நடிப்பை தந்த போதிலும் இந்தியன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நொந்து போய் உள்ளனர். ஏனெனில் இது ஷங்கர் படமாகவும் இல்லை. கமல்ஹாசன் படமாகவும் இல்லை. இந்தியன் 2 படம் என்ன கதைக்களம் என்றே புரியவில்லை, லாஜிக்கே இல்லாத கதை, கதையே இல்லாத பிரமாண்டம் என்ற விமர்சனத்தில் இந்தியன் 2 பிளாப் படமாக ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் குறித்து திரை பிரபலங்கள் சிலர் கம்பி கட்டும் விதமாக இந்தியன் 2 படம் சிறப்பாக இருப்பதாக புளுகி வருகின்றனர். இதை பார்த்து ரசிகர்கள் பலரும், வாய் கூசாம இப்படி பொய் பேசறாங்களே, என கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்த 2022ல் கலந்துக்கொண்ட ரக்சிதா மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், நான் நிறைய ஏமாந்துவிட்டேன். இதற்கு பதிலாக இந்தியன் படத்தையே ரி ரிலீஸ் செய்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.





