- Advertisement -
Homeபொழுதுபோக்குஆந்திராவில் துணை முதல்வர் பவன் கல்யாண் மாதிரி இனிமேல் இவரா? அட்ரா சக்க… சிவகார்த்திகேயன் வெளியிட்ட...

ஆந்திராவில் துணை முதல்வர் பவன் கல்யாண் மாதிரி இனிமேல் இவரா? அட்ரா சக்க… சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ வைரல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதுவரை அவரது நடிப்பில் 21 படங்கள் வெளியாகி இருக்கின்றன. இனி அடுத்ததாக 22வது படமாக ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த அமரன் படமும், 23வது படமாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கநடை படமும் வெளிவர உள்ளது.

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து முன்னேறியவர் சிவகார்த்திகேயன். அதே நேரத்தில் அவர் நடிக்கும் படங்களில் முன்னணி நாயகிகள், முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், பெரிய நடிகர்கள் இருக்கும்படி அவர் பார்த்துக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலீஸ் அதிகாரி மகன் சிவகார்த்திகேயன், தனது சொந்த அக்கா மகள் ஆர்த்தியை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டில் ஆர்த்தி 3வது முறையாக கர்ப்பமானார். தொடர்ந்து சில வாரங்களுக்கு முன், தனக்கு மகன் பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன், மகிழ்வான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள குடும்ப வீடியோ வைரலாகி வருகிறது. இதில் அவரது இல்லத்தில் 3வது பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடக்கிறது. இதில் மனைவி மற்றும் தன் குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறதர். இதில் 3வது பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் சூட்டியிருப்பதாக அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜனசேனா கட்சியின் தலைவராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவின் சகோதரர், ராம்சரணுக்கு சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அமைந்துள்ள சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில், பவன் கல்யாண் துணை முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மகனுக்கு பவன் சிவகார்த்திகேயன் என பெயர் சூட்டியிருப்பதால், எதிர்காலத்தில் தனது 3வது பிள்ளை பவன் கல்யாணை போல, பவன் சிவகார்த்திகேயனும் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று, இந்த பெயரை சிவகார்த்திகேயன் சூட்டி விட்டாரா, என்று ரசிகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். எனினும் ஆராதனா, குகன் வரிசையில் பவன் சிவகார்த்திகேயனும் பெயரும் சூப்பராக இருக்கிறது என்று வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ காண இங்கு கிளிக் செய்யவும் –  https://x.com/Siva_Kartikeyan/status/1812698610724945956

சற்று முன்