இந்த ஆண்டு முதல் பாதியில் வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ள வேளையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நட்சத்திர கதாநாயகர்களின் படம் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. அண்மையில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. இதற்கடுத்து வரவிருக்கும் மாதங்களில் தனுஷின் ராயன், சூர்யாவின் கங்குவா, விக்ரமின் தங்கலான், ரஜினியின் வேட்டையின், அஜித்குமாரின் விடாமுயற்சி, விஜய்யின் கோட் என அடுத்தடுத்து பெரிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
இந்நிலையில் அண்மையில் வெளியான கமலஹாசனின் இந்தியன் 2 படமானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வேளையில் எதிர்பார்ப்புக்கு இணையாக அந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக இந்த படம் வெளியான முதல் ஐந்து நாட்களில் வெறும் 65 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் நீட்டிப்பாக இந்த இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. 250 ரூபாய் செலவில் உருவான இந்த படம் தற்போது வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது படக்குழுவினருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நிச்சயம் மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இதுவரை கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இந்த படம் வசூலில் அப்படியே தேங்கியுள்ளது. இந்த படத்தின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வரும் வேளையில் இந்த படத்தில் 15 நிமிடம் காட்சிகள் ட்ரீம் செய்யப்பட்டு தற்போது திரையிடப்பட்டாலும் அதுவும் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் “இந்தியன் 2” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி ரஜினியை குறிவைத்து பேசப்பட்டதாகவும் அதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் தற்போது கமலையும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு காட்சியின் போது கமல் பேசுகையில் : சிஸ்டம் சரியில்லை என்று வீட்டுக்குள்ளே உட்கார்ந்து இருந்தா சிஸ்டம் எப்படி சரியாகும்? அதை நாம் தான் இறங்கி சரி செய்ய வேண்டும் என்று ரஜினியை குத்திக் காட்டும் வகையில் கமல் பேசியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசியில் பின் வாங்கி விட்டார். ஆனால் கமல் தனக்கென ஒரு கட்சியை ஆரம்பித்து தற்போது தேர்தல்களில் பங்கேற்று வருகிறார். அதனை வைத்து தான் அவர் இந்த காட்சியை பேசி உள்ளதாகவும் ரஜினியின் ரசிகர்கள் கமலை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.





