- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தால் தயாரிப்பாளருக்கு நீடித்த சிக்கல், ஆபத்பாந்தவனாய் காப்பாற்றிய நடிகர் யஷ் - இராமாயணம் படமும்...

விஜய் படத்தால் தயாரிப்பாளருக்கு நீடித்த சிக்கல், ஆபத்பாந்தவனாய் காப்பாற்றிய நடிகர் யஷ் – இராமாயணம் படமும் முன்கூட்டியே ரிலீஸ் ஆகப் போகுதா?

- Advertisement -

கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்த ஜனநாயகன் படம் கடந்த 5 மாதங்களாக பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் ஹீரோ உள்ளிட்ட யாருக்குமே தெரியாது. என்ன காரணம் என்றே தெரியாமல் அந்த படம் ரிலீஸ்க்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை வாங்கிய தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பித் தருமாறு தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்தனர். அவர்கள் கேட்டபடி சினிமா வட்டி தர முடியாது. வங்கி சதவீத அடிப்படையில் இன்று 22ம் தேதி பணத்தை திருப்பித் தருவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறியிருந்தது.

- Advertisement -

ஆனால் இதுவரை அந்த பெரிய தொகையை வினியோகஸ்தர்களுக்கு திருப்பித் தரவில்லை. ஜனநாயகன் படத்துக்கு மாற்றாக வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் படத்தை வினியோகஸ்தர்களுக்கு தர தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி தான் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் நடிகர் யஷ் வில்லனாக நடித்த இராமாயணம் படம் வருகிற நவம்பர் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. இது ஒரு பான் இந்தியா படம். இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ள நிலையில், அதன்பிறகு அவர் நாயகனாக நடித்த டாக்ஸிக் படம் வெளியானால் அது ரசிகர்களுக்கு முரண்பட்ட படமாக இருக்க கூடும்.

- Advertisement -

அதனால் முன்கூட்டியே டாக்ஸிக் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்து வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் படத்தை ரிலீஸ் செய்கின்றனர். மேலும் ஜனநாயகன் படத்துக்கு மாற்றாக இந்த படத்தை வினியோகஸ்தர்களுக்கு தரவும், இதில் கிடைக்கும் லாபத்தை பொறுத்து மீண்டும் அவர்களுக்கு தொகை தர வேண்டும் என்றாலும் தருவதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக மொத்தத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலுக்கு ஆபத்பாந்தவனாக நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் படம் உதவ போகிறது. அதே நேரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸ் இப்படியே தள்ளிப் போனால், விஜயின் கடைசி படத்தை ரசிகர்கள் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கமும் தளபதி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்