- Advertisement -
Homeபொழுதுபோக்குசெம ஸ்மார்ட்டான லுக்கில் விஜய்... வண்ண நிலவே பாடல் நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்... ஒருவேளை...

செம ஸ்மார்ட்டான லுக்கில் விஜய்… வண்ண நிலவே பாடல் நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்… ஒருவேளை அதுல இருக்காரோ?…

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது அரசியல் ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் என படு பிஸியாக இருக்கிறார். இதில் விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போடப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க அரசியலிலேயே தனது கவனம் இருக்கப் போவதாகவும் அண்மையில் அறிவித்தார் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்து வரும் கோட் திரைப்படம், விஜயின் கடைசி திரைப்படத்திற்கு முந்தைய திரைப்படமாகும்.

 

- Advertisement -

இதனால் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ரசிகர்கள். இதில் சினேகா, பிரசாந்த் பிரபுதேவா லைலா என முன்னணி நட்சத்திரங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அதுபோக யோகி பாபு, வி டிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ் என ஒரு கலாட்டா கூட்டணியையும் வெங்கட் பிரபு கையில் வைத்திருக்கிறார்.

 

- Advertisement -

டைம் டிராவலை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பது இங்கு பலருக்கும் தெரியும். அப்பா மகன் என இரண்டு ரோலில் அவர் ஏற்று நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தை மிகவும் இளமையாக காட்டுவதற்காக அதிகமாகவே மெனக்கெட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.

 

அண்மையில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான வீடியோவில், இரண்டு விஜய் கதாபாத்திரங்களும் ஒரே பைக்கில் செல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ரஷ்யாவில் தான் இதன் கதை தொடங்குவதாக கூறப்படுகிறது. அங்கு தமிழ் அதிகாரியின் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கப்படும் சூழலில் அதிலிருந்து அவர் எவ்வாறு மீள்கிறார் என்பதே இந்த படத்தின் கதை என்று கிசுகிசுக்கப்படுகிறது.

 

டைம் ட்ராவல் கதை என்பதால் இதில் பல சஸ்பென்ஸ்களை வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக, மறைந்த நடிகர் விஜய்காந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவர் காட்டியிருக்கிறார். த்ரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கோட் படத்தின் மீது ஒட்டுமொத்த பார்வையும் சென்றுள்ளது.

 

வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான சிஜி பணிகள் தீவிரம் எடுத்துள்ளன. இந்த நிலையில் தளபதி விஜய்யை பிரபல நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்து இருக்கிறார். கோட் திரைப்படம் தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டிருந்த போதே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இதில் புதிய ஹேர் ஸ்டைல் உடன் செம்ம ஸ்மார்ட்டாக விஜய் காட்சி இருக்கிறார். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை கோட் படத்தில் ரம்பா இடம் பெற்றிருப்பாரோ என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்