- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள்... ஒரு பக்கம் ரத்தம் சதை... மறுபக்கம் திகட்ட...

விடுதலை 2 படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள்… ஒரு பக்கம் ரத்தம் சதை… மறுபக்கம் திகட்ட திகட்ட காதல்… இறங்கி விளையாடப் போகும் வெற்றிமாறன்…

- Advertisement -

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் கையில் எடுத்த திரைப்படம் தான் விடுதலை. ஜெயமோகன் எழுதிய துணைவன் என்னும் நாவலை தழுவி இதன் கதையை கையில் எடுத்தார் வெற்றிமாறன். இந்த படத்திற்காக, சூரி கதாநாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

- Advertisement -

இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்து குமரேசன் என்னும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆன கனமான கதாபாத்திரத்தை கையில் கொடுத்தார் வெற்றிமாறன். தனது பொறுப்பை உணர்ந்து கொண்டு திறம்பட செயல்பட்ட சூரி, அந்தப் படத்தில் குமரேசன் ஆகவே வாழ்ந்து கெத்து காட்டினார்.

 

- Advertisement -

மிகச் சிறிய பட்ஜெட்டில் இந்த படத்தை எடுப்பதற்கு தான் முதலில் முடிவு செய்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் கதைக்குள் செல்ல செல்ல அதன் களம் விரிந்து கொண்டே இருந்தது. பட்ஜெட்டும் ஒரு பக்கம் எகிறிது. இதனால் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டார் வெற்றிமாறன். அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.

 

அதில் முழுக்க முழுக்க சூரிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வந்து போனார் விஜய் சேதுபதி. ஆனால் அவருக்குப் பின் ஒரு கனமான கதை இருப்பது படத்தை பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது. நிச்சயம் இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பினார்கள்.

 

அது உண்மைதான் என்பது போல, படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி உறுதிப்படுத்தியுள்ளன. முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வந்து போனார் விஜய் சேதுபதி. தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டரில், அவர் வாத்தியாராக இருந்த கேரக்டரின் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. காதல் ரசம் சொட்ட சொட்ட அவர் மஞ்சுவாரியுடன் காதல் செய்வது ஒன்று வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

 

இன்னொன்று கையில் கத்தியும் முகத்தில் ரத்தமாக விஜய் சேதுபதி ஆக்ரோஷத்துடன் சீறுவது போன்ற ஒரு புகைப்படமும் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் வெற்றிமாறன் இருப்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கௌதமேனன் ராஜீவ் மேனன் பவன் ஸ்ரீ ஏராளமானோர் நடித்து வருகிறார்கள். அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்