- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு விஷயத்துக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருந்த பெண் இயக்குனர் - மின்மினி...

அந்த ஒரு விஷயத்துக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருந்த பெண் இயக்குனர் – மின்மினி படத்துக்கு இசையமைத்த பிரபலத்தின் மகள் – போடு வெடிய… தரமான சம்பவங்களா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படைப்புகளை தர வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட சில படைப்பாளிகளும் இருக்கவே செய்கின்றனர். கமர்ஷியல் என்ற பெயரில் குப்பை படங்களை தந்து, கோடிக்கணக்கில் சம்பாதித்தோம் என்று பொருளாதாரரீதியாக திருப்தி கொள்ளாமல், நல்ல படைப்பு என ரசிகர்கள் கொண்டாடும் படங்களை தர வேண்டும் என்று மெனக்கெடும் இயக்குனர்களும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.

சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களை இயக்கியவர் பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் இப்போது உருவாகியுள்ள படம்தான் மின்மினி. இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. குழந்தைகளை இருப்பவர்கள், இளம் வயதினராக மாறுவதை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சிறுவர்கள், வளர்ந்து இளைஞர்களாக மாறுகிற வரை என, 7 ஆண்டுகள் வரை காத்திருந்து இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷாம். அதாவது சிறுவர்களாக நடித்த அவர்களே, இளைஞர்கள் தோற்றத்திலும் நடிக்க 7 ஆண்டுகள் அவர்கள் வளர்ச்சிக்காக காத்திருக்கிறார் இந்த பெண் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்துக்கு இசை்யமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மகள் கதீஜா தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவில் பேசிய கதீஜா கூறுகையில், முதலில் இந்த படத்துக்கு இசையமைக்க நான் தயாராக இல்லை. ஆனால் ஹலிதா விடாப்பிடியாக இந்த படத்துக்கு நான்தான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார்.

- Advertisement -

மின்மினி படத்துக்கு, இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மகள் கதீஜா தான் இசையமைப்பாளர் என்று ஒரு கட்டத்தில் அறிவிக்கப்பட்ட போது. நான் நிறைய டிவீட்டுகளை பார்த்தேன். திறமையான நபர்கள் நிறைய பேர் இருக்கும்போது, இவரை எதற்காக தேர்வு செய்தீர்கள் என்று பலரும் அதில் கமெண்ட் செய்திருந்தனர். இது என்னை மிகவும் பாதித்தது.

அதனால், இந்த படத்துக்கும் எனக்கு இசையமைக்கும் வாய்ப்பை கொடுத்த இயக்குனருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக இசை இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து, கடுமையாக உழைத்து இசையமைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள். இல்லை என்றால், வலைதளங்களில் மிக மோசமாக திட்டாதீர்கள் என்று கதீஜா உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

- Advertisement -

சற்று முன்