கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி இந்தியா முழுவதும் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படமாக இருந்தது புஷ்பா. தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் என பான் இந்தியா படமாக வெளியாகி, பிளாக் பஸ்டர் மூவியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் சிறந்த நடிப்பை வழங்கி, சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றார் அல்லு அர்ஜூன்.
டைரக்டர் சுகுமாறன் இயக்கிய புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சுமன், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில், பாடல்களும் செம ஹிட் ஆகின. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஊ சொல்றியா மாமா பாடலில், நடிகை சமந்தா போட்ட குத்தாட்டம், செம வைரலாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
புஷ்பா 2 படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் நிலையில், ஆகஸ்ட் 15ல் புஷ்பா 2 ரிலீஸ் என்று ஏற்கனவே படக்கழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அதனால் அந்த நாளுக்காக சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். குறிப்பாக, தமிழக சினிமா ரசிகரக்ள், புஷ்பா 2 படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அதனால் புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் நாளில், மற்ற தமிழ் படங்கள் ரிலீஸ் ஆனால் சரியான வசூல் கிடைக்காது. புஷ்பா 2 ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தை காணவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், ரிலீஸ்க்கு தயாராக இருந்த படங்களை கூட, ஆகஸ்ட் 15 கழித்து பிறகு வெளியிடலாம் என தயாரிப்பாளர்களும், நடிகர்களும் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் இப்போது புஷ்பா 2 ரிலீஸ், டிசம்பர் 6ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் விதமாக, சகல அம்சங்களுடன் படத்தை தர இன்னும் சற்று கால அவகாசம் தேவைப்படுவதால், 3 மாதங்கள், 20 நாட்கள் கழித்து டிசம்பர் 6ல் புஷ்பா 2 ரிலீஸ் செய்யப்படுகிறது.
அல்லு அர்ஜூன் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டதால் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய தங்கலான் ஆகிய 2 படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. அதே போல் கார்த்தி நடித்த மெய்யழகன், கவின் நடித்த பிளடி பெக்கர், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.





