- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரசாந்த் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அரசியலுக்கு போன விஜய் இடத்தை பிடிக்கப் போவதும்...

நடிகர் பிரசாந்த் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அரசியலுக்கு போன விஜய் இடத்தை பிடிக்கப் போவதும் அவர்தான் – பிரபல நடிகை சர்ச்சை பேச்சால் பரபரப்பு!

- Advertisement -

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். கடந்த 1990களில் பல ஹிட் படங்களில் நடித்தவர். குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக, பிரசாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது பெரிய அளவில் அப்போது பேசப்பட்டது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த், ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னையால் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். அவரது தந்தை நடிகர் தியாகராஜன் அன்பும், ஆதரவும் காட்டி மகனை அந்த மோசமான சூழ்நிலையில் இருந்து மீட்டு, தன் அரவணைப்பில் வைத்துக்கொண்டார். சினிமாவில் நடிக்காததால் தந்தையின் பிஸினஸ்களை இதுவரை நடிகர் பிரசாந்த் கவனித்துக்கொண்டார்.

இப்போது மீண்டும் பிரசாந்த், தனது 51வது வயதில் இரண்டாவது இன்னிங்சை தமிழ் சினிமாவில் துவங்கி இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜயுடன் தி கோட் படத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். மேலும் அந்தாதுன் என்ற இந்தி படத்தை தமிழில், அந்தகன் என்ற பெயரில் நடிகர் தியாகராஜன் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடித்துள்ளார். இதில் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அந்தகன் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்றார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியவர். நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா நட்சத்திர தம்பதியின் மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மகள் ஜோவிகா, கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார்.

இந்த பட விழாவில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் பேசியதாவது, அந்தகன் படத்தில் சிறந்த ஒரு கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். தியாகராஜன் சார் மீது எனக்கு அன்பும், மரியாதையும் மிகவும் அதிகம். அவரைப் போன்ற ஒரு தந்தை எனக்கு அமையவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். நடிகர் பிரசாந்த் மீது எனக்கு எப்போதுமே பிரியம் அதிகம். என்னுடைய டீன்ஏஜ் கிரஷ் பிரசாந்த் மீதுதான் இருந்தது.

அவருடன் பழகிய நாட்களில், எனக்கு நல்ல நட்பு கிடைத்தது. மிகச் சிறந்த மனிதர் பிரசாந்த். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, பெருந்தன்மை எல்லாமே அவரது தந்தை தியாகராஜனிடம் இருந்து அவர் கற்றுக்கொண்டதுதான். இந்த படம் தானாகவே மிகப்பெரிய வெற்றியை அடையும். அந்த அளவுக்கு ஒரு சிறந்த படம் இது. விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அவரது இடத்துக்கு தமிழ் சினிமாவில் வரப்போவது பிரசாந்த் தான். நீங்கள்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், என்று பேசி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

சற்று முன்