- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு… விஜய் படத்தில் நடிக்க கமல் சொல்லும் புதிய...

அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு… விஜய் படத்தில் நடிக்க கமல் சொல்லும் புதிய தத்துவம் இதுவாக இருக்குமோ…? – துட்டுக்கு முன்னாடி ஓட்டு நிக்காதுடே…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸில் படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. வருகிற செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, விஜய் 69 என்ற படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ள நடிகர் விஜய், அத்துடன் தனது சினிமா நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டு விடுவதாக அறிவித்துள்ளார். அடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக, முழு நேர அரசியல்வாதியாக தன் அடுத்தகட்ட பயணத்தில் ஆர்வமாக இருக்கிறார்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் அவரது 69வது படத்தை டைரக்டர் எச் வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் 1, நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை போன்ற படங்களை இயக்கியவர். இந்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை.

துணிவு படத்துக்கு பிறகு, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு படத்தை தான் எச் வினோத் இயக்குவதாக இருந்தது. இந்த கதையை கமலும், எச் வினோத்தும் இணைந்து பேசிதான், இருவரது கருத்துகளை, ஐடியாக்களை போட்டு உருவாக்கினர். ஆனால் கமல், இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என ஒதுங்கியதால், அதே கதையில் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் படத்தில், மிக முக்கியமான கேரக்டர் ஒன்று வருகிறது. படத்தில் மிக முக்கியமானதாகவும், அழுத்தமான கேரக்டராகவும் இருப்பதால் அதில் நடிகர் கமல்ஹாசனே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று எச் வினோத் விரும்புகிறார். அதே நேரத்தில், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் விஜய் படத்தில், ஸ்டாலின் ஆதரவாளரான கமல் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் விஜய் உடன் இணைந்து நடித்தால், இது விஜய் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்துமோ என்ற கருத்தும் வலுத்துள்ளது. ஆனால் சினிமாவை பொருத்த வரை துட்டுதான் முக்கியம். ரூ. 150 கோடி சம்பளம் என்றதும், கல்கி படத்தில் வில்லனாக நடித்தவர் கமல். அதனால் விஜய் படத்தில் கமல்ஹாசன் தாராளமாக நடிக்க முன்வந்து விடுவார். அப்போது அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு, என்ற டயலாக்கையும் முத்தாய்ப்பாக பேசி சமாளித்து விடுவார் கமல் என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

சற்று முன்