தமிழ் சினிமாவில் சில நடிகர்களுடன் நடிப்பது, சில இயக்குனர்களின் படங்களில் நடிப்பது என்பது பல நடிகர்களுக்கு பெரிய கனவாக, லட்சியமாக இருக்கும். அந்த இயக்குனர் படத்தில் நடிக்க, அந்த ஸ்டார் நடிகருடன் நடிக்க எனக்கு சம்பளமே வேண்டாம், என்றெல்லாம் நேர்காணல்களில், பத்திரிகை பேட்டிகளில் அவர்கள் கூறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதிலும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், விஜய் போன்றவர்களின்படங்களில் நடிப்பது என்பது, பல நடிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். அதனால் சில இயக்குனர்கள் இதுபோன்ற ஆசைப்படும் நடிகர்களை இவர்களது படங்களில் ஏதேனும் சில காட்சிகளில், நடித்து வைத்து விடுவர். சிலர் சம்பளமே இல்லாமல் கூட சந்தோஷமாக நடித்துக்கொடுத்து விடுவர்.
ஏனெனில் தங்களது அபிமான நடிகர், இயக்குனர் படங்களில் நடிப்பது அவர்களது சினிமா வாழ்க்கை பயணத்தில் பெரிய மைல் கல்லாக இருக்கும். அதனால், அவர்களுக்கு வேறு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கூட அமையலாம். ஏனெனில் முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்களில் நடிப்பதும் கூட அவர்களுக்கு நல்ல பப்ளிசிடியை தந்து விடுகிறது.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில், முக்கிய கேரக்டர்களில் நடிக்க வைக்க நடிகர், நடிகைகளை தேடும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்களே தேர்வான நிலையில், வில்லன் கேரக்டரில் நடிக்க இன்னும் நடிகர் சிக்கவில்லை.
இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோரை லோகேஷ் கனகராஜ் அணுகிய நிலையில், சூப்பர் ஸ்டார் படத்தில் நடிப்பது பெருமைதான். ஆனால் வில்லனாக நடித்து, எங்கள் இமேஜை டேமேஜ் ஆக்கிக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று அவர்கள் பின்வாங்கி விட்டனர். பிறகு மற்ற மொழிகளில் வில்லன்களை தேடி வந்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. படத்தில் தனது கேரக்டர் குறித்து தெரிந்துக்கொண்ட நாகர்ஜூனா, அப்படிப்பட்ட வில்லன் கேரக்டரில் நடித்தால், எனக்குள்ள நல்ல பெயர் கெட்டுவிடும். இது எனக்கு சரியா வராது, வேறு நடிகர் பாருங்க, என்று சொல்லி மறுத்துவிட்டார். இப்போது டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், ரஜினி நடிக்கும் படமாக இருந்தும் வில்லனாக நடிக்க யாரும் முன்வராமல் படக்குழு நொந்து போயுள்ளது.





