- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்துல மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் மிஞ்சிடுவார் போல இருக்கே? -...

இந்த விஷயத்துல மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் மிஞ்சிடுவார் போல இருக்கே? – தனது மகன்களுடன் அவர் சென்ற இடத்தை பாருங்க!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில், அவரது இயக்கத்தில் கடந்த 26ம் தேதி ராயன் படம் வெளியானது. இது தனுஷ் நடிப்பில் வெளியான 50வது படம் ராயன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வயலன்ஸ் படமாக விமர்சிக்கப்பட்டாலும் ஏஆர் ரகுமான் இசையில், சண்டைக்காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இந்த படத்தில் தனுஷூடன் துஷாரா விஜயன், அபர்ணா முரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சரவணன், செல்வராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். படத்துக்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி நடிகர் தனுஷ், தன்னை பற்றிய மோசமான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக பேசியதும் வைரலானது. நான் யார் என்பது என்னை படைத்த சிவனுக்கு தெரியும், என் பெற்றோருக்கு தெரியும், என் பசங்களுக்கு தெரியும், என்னை ஆரம்பத்தில் பலரும் உருவக்கேலி செய்துள்ளனர். இன்று ரசிகர்களால் 50வது படத்தில் நடித்திருக்கிறேன், என்று உருக்கமாக பேசியிருந்தார்.

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன். அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தனுஷை விட ஐஸ்வர்யா ஐந்து வயது மூத்தவர் என்ற போதிலும் தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா, இந்த திருமணத்துக்கு சம்மதித்தார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ள நிலையில், இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்துக்கும் தயாராகி விட்டனர்.

- Advertisement -

தனுஷின் மாமனார் ரஜினிகாந்த், ஆன்மிகவாதி. நிறைந்த கடவுள் பக்தி கொண்டவர். அடிக்கடி இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது அவரை போலவே, அவரது மருமகன் தனுஷூம் அதிக ஆன்மிக நாட்டம் கொண்டவராக மாறி வருகிறார். அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் ஆடி கிருத்திகை தினமான இன்று, பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு, தன் 2 மகன்களுடன் அவர் இ்ன்று காலை வருகை தந்தார். கையில் ருத்ராட்ச மாலையை வைத்தபடி, அவர் இறைதரிசனம் வழிபாட்டில் ஈடுபட்டார். தனுஷ், அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தார் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. தனுஷை பார்க்க ஆர்வமாய் பக்தர்களும், ரசிகர்களும் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்தினர். மாமனார் ரஜினியே மிஞ்சும் அளவுக்கு சமீபமாக ஆ்ன்மிக நாட்டம் காட்டி வருகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்