- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ராஜாக்கள பார்த்தாச்சு டா.. இவன் கத்தி ரொம்ப கூராச்சு டா.. தரமான சம்பவம்...

பல ராஜாக்கள பார்த்தாச்சு டா.. இவன் கத்தி ரொம்ப கூராச்சு டா.. தரமான சம்பவம் செய்த லியோ செகண்ட் சிங்கிள்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா என பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது இந்தப் படத்தில். கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் இப்படத்தை இயக்கியிருப்பதால் கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

பட ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதால் படத்திலிருந்து அப்டேட்டுகள் சரவெடியாக வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் போஸ்டர்கள் வந்த சூழலில் செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடப்பதாக இருந்தது. அதற்காக பாஸ்கள் வழங்கப்பட்டு மேடை அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

- Advertisement -

ஆனால் சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லியோ ஆடியோ லான்ச் நடக்காது என அறிவித்தது. மேலும் பாஸ்களுக்கான கோரிக்கை நிரம்பி வழிவதாகவும்; பாதுகாப்பு காரணங்களாலும் விழா நடக்காது என்று காரணம் சொன்னது. இது விஜய் ரசிகர்களை உச்சக்கட்ட அப்செட்டாக்கியிருக்கிறது.

ஆடியோ லான்ச் நடைபெறாவிட்டாலும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுக்கொண்டே இருக்கும் என படக்குழு தெரிவித்திருந்தது. இதனால் எந்த மாதிரியான அப்டேட் அடுத்து வரும் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த சூழலில் நேற்று நள்ளிரவு ஒரு ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில் லியோவின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

- Advertisement -

அதன்படி இன்று மாலை படத்தின் இரண்டாவது சிங்கிளான Bad Ass என்ற பாடல் வெளியானது. லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரும், மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியவருமான விஷ்ணு எடவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். வழக்கம்போல் அனிருத் தனது ட்யூனாலும், குரலாலும் பாடலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார்.

குறிப்பாக சிங்கம் இறங்குனா காட்டுக்கு விருந்து இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி வரிகளும்; வத்திக்குச்சில எரிமல மகனே நெருங்காத நீ கொலசாமிய வேண்டிக்கோ மாமே மொறைக்காத நீ; பல ராஜாக்கள பார்த்தாச்சு டா இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா, நூறு பஞ்சாயத்த பார்த்தாச்சு டா வரலாறு மொத்த ப்ளட் ஆச்சு டா போன்ற வரிகளை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். லியோவிலிருந்து வெளியான முதல் பாடலான நா ரெடிதான் பாடலையும் விஷ்ணு எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது பாடலையும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்