- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல யூ டியூப் சேனல் பேட்டிக்காக தொகுப்பாளினியுடன் பைக்கில் ஊர் சுற்றிய பிரசாந்த்... அடுத்து நடந்த...

பிரபல யூ டியூப் சேனல் பேட்டிக்காக தொகுப்பாளினியுடன் பைக்கில் ஊர் சுற்றிய பிரசாந்த்… அடுத்து நடந்த ட்விஸ்ட்… நிச்சயமா இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க….

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தார். குறிப்பாக அவர் சங்கர் இயக்கத்தில் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

அதற்கு முன்பு இரட்டை சகோதரர்கள் குறித்த கான்செப்ட் நிறைய வந்திருந்தாலும், அதிலிருந்து சற்று வேறுபடுத்தி கச்சிதமாக திரைக்கதையை செதுக்கியிருந்தார் சங்கர். படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்க, பிரசாந்தும் தனது நடிப்பால் அசத்தியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையும் படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

 

இப்படி அனைத்துமே சரியாக இருந்ததால் ஜீன்ஸ் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் நல்ல ஒரு வாய்ப்பை கொடுத்தது. இதன் பிறகு இளம் பெண்களின் சாக்லேட் பாயாக மாறிப்போனார் பிரசாந்த். அதிலும் ஜோடி திரைப்படம் அவரை பல உயரத்திற்கு அழைத்துச் சென்றது.

 

இப்படியான சூழலில், பிரசாந்த் தனது திருமண வாழ்க்கைக்கு பிறகு சரியாக திரையுலக வாழ்க்கையை கவனிக்கவில்லை. பிரச்சனைகளில் சிக்கித் தவித்த பிரசாந்துக்கு, திரைப்படங்கள் சரியாக அமையாததால் தொடர் தோல்வி படங்களையே கொடுத்து வந்தார். தகப்பன்சாமி, மம்பட்டியான், ஆயுதம் என அவர் நடித்த அத்தனை படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தன.

 

இந்த நிலையில் தான் இரண்டாம் கட்ட பாய்ச்சலுக்காக தயாராகி இருக்கிறார் பிரசாந்த். பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி வெளியாகிறது. இதேபோல் அவர் விஜய்யின் கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில் பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் பிரசாந்த். அப்போது தொகுப்பாளினியுடன், புல்லட் இருசக்கர வாகனத்தில் பயணித்தார். தனது பழைய நினைவுகளையும் அவர் சுவாரசியமாக கூறியிருந்தார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதில் பிரசாந்த் ஹெல்மெட் போடாமல் பயணித்ததை கவனித்து சென்னை மாநகர போலீசார் கவனித்து 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை சமூக வலைதளத்திலும் பதிவிட்ட நிலையில் இணையத்தை பலரும் இந்த சம்பவத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.

சற்று முன்