- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் 171 ஆவது படம்? பத்திரிக்கையாளர்களிடம் வாய் விட்டு மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ், இனி ஒன்னும்...

ரஜினியின் 171 ஆவது படம்? பத்திரிக்கையாளர்களிடம் வாய் விட்டு மாட்டிக்கொண்ட லோகேஷ் கனகராஜ், இனி ஒன்னும் பண்ண முடியாது

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய “கைதி” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அத்திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.

அதன் பின் “மாஸ்டர்” திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்படம் உலகளவில் மிகப் பெரிய வெற்றியை குவித்தது. இந்த வெற்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த வெற்றியாக திகழ்ந்தது.

லோகேஷ் கனகராஜ்ஜிற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகத்தொடங்கியது. அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை உருவாக்கினார். அது ஒரு கூடுதலான சுவராஸ்யத்தை கொடுத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை உருவாக்கி வரும் நிலையில் “லியோ” திரைப்படம் LCUக்குள் வருமா? வராதா? போன்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த தகவல் ஓரளவு உண்மையான தகவல் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு விழாவில் கலந்துகொண்டபோது பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில் ஒரு நிருபர், “நீங்கள் ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக கூறுகிறார்களே, உண்மையா?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அப்டேட் வந்தால்தான் சொல்ல முடியும்” என்று கூறினார்.

“அப்படி என்றால் ரஜினியை வைத்து இயக்குவது உறுதியா?” என்று கேட்க, அதற்கு லோகேஷ் கனகராஜ், “தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அப்டேட் வரவேண்டும். நானாக எதுவும் கூற முடியாது அல்லவா?” என கூறினார். இதில் இருந்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்குவது உறுதி என தெரிய வருகிறது.

சற்று முன்