மலையாள நடிகை மஞ்சுவாரியர் கேரள சினிமாவுக்கு மிகப்பெரிய அளவில் பரீட்சையமானவர். 20களில் இருந்தே அவர் மலையாள சினிமாவில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் அவர் வைத்திருக்கிறார். மலையாள நடிகர் திலீப்பை அவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர்கள் பிரிந்தனர். கணவரை பிரிந்ததற்குப் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் அவர் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.
அதில் மிகவும் கனமான பாத்திரத்தை வெற்றிமாறன் அவருக்கு அளிக்க அதை சிறப்பாக செய்து முடித்தார் மஞ்சுவாரியர். பச்சையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது ஒவ்வொரு காட்சியிலும் நெல்லைப் பகுதி பெண்ணாகவே நடித்து அமர்க்கள படுத்தினார். அதிலும் மகனை இழந்து வாடும் அவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்தார் மஞ்சு வாரியர். இதில் ஆக்சன் ஹீரோயின் ஆக வந்து மஞ்சு வாரியர் கலக்கினார். படப்பிடிப்பின் போது அஜித்துடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, அவரைப்போலவே பைக் ஓட்டி அசத்தினார். தற்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
விரைவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் காட்சியில் அவர் வருவார் என்பது உறுதியாக இருக்கும் சூழலில், மஞ்சு வாரியரின் என்ட்ரியை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதேபோல் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் மஞ்சுவாரியர் இருக்கிறார். இதில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக அவர் நடித்துள்ளாராம்.
இப்படி தமிழில் பிசியாக இருக்கும் மலையாள நடிகையை அந்த ஊரில், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இங்கு நயன்தாராவை அழைப்பது போன்றே அங்கும் ரசிகர்கள் இவரை இப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால் இப்படி தன்னை அழைப்பது அவமானமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் மஞ்சு வாரியர். தன்னை இது போன்ற அழைத்தால் சமூக வலைதளங்களில் தேவையில்லாத விவாதங்கள் உருவாவதாகவும், இந்த மாதிரியான பட்டங்கள் தனக்கு தேவையில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். ரசிகர்களின் அன்பே எனக்கு கடைசி வரைக்கும் போதும் என்று அவர் உணர்ச்சிவசப்பட தெரிவித்துள்ளார். நடிகை இவ்வாறு வேண்டுகோள் வைத்திருப்பதால் இனி அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் போவதில்லை என ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளார்கள்.





