தமிழ் சினிமாவில் 1980களில் இயக்குனராக நடிகராக இசையமைப்பாளராக கொடி கட்டிப் பறந்தவர் டி ராஜேந்தர். அவரது 3 பிள்ளைகளில் மூத்த மகன் சிம்பு. இப்போது வயது 40களை கடந்த நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார்.
நடிகர் சிம்பு இப்போது தக்லைஃப் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். தனது மகனின் திருமணம் விரைவில் நடக்கும் என்று டி ராஜேந்தர், அவரது மனைவி உஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் உறுதியாக கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அன்றைய இளம்வாலிபர்கள் பலரின் கனவுகன்னியாக குஷ்பு இருந்தார். ரஜினி கமல் பிரபு கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துக் கொண்டார்.
நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஜாஸ்தியாக இருந்தது. குஷ்புவுக்கு ரசிகர்கள் சார்பில் கோவில் கட்டியதாக கூட அப்போது தகவல் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் கிரஷ் இருந்தது. இப்போது குஷ்பு சினிமா தயாரிப்பாளராக அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரப டிவி சேனலில் நடந்த நேர்காணலில் நடிகை குஷ்பு நடிகர் சிம்புவை பேட்டியெடுத்தார். அப்போது நடிகர் சிம்பு நடிகை குஷ்புவிடம் கூறியதாவது, எனக்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும். சின்ன வயசுல விருது கொடுக்கும் ஏதோ ஒரு விழாவில் உங்களுக்கு அடுத்து நான் தான் உட்கார்ந்திருந்தேன். எனக்கெல்லாம் அப்போது அது அவ்வளவு பெருமையா இருந்தது.
நான் உங்க போட்டோவை என் தலையணைக்கு அடியில் வெச்சுட்டுதான் தினமும் தூங்குவேன். என் அப்பாவும் அம்மாவும், இவன் என்ன குஷ்பு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கான்னு பேசிட்டு இருந்தாங்க. நான் வாழ்க்கையில அதிக தடவை பார்த்த படம் உங்க படம்தான். நீங்க நடிச்ச வருஷம் 16 படத்தை குறைந்தது 150 தடவைக்கு மேல் நான் பார்த்திருக்கிறேன் என்று நடிகர் சிம்பு குஷ்புவிடம் கூறியிருக்கிறார்.





