- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியை கண்டபடி திட்டிய பிரபல நடிகை; அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த...

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சமுத்திரக்கனியை கண்டபடி திட்டிய பிரபல நடிகை; அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த டைரக்டர் தியாகராஜன் – அடுத்த பஞ்சாயத்து ரெடியா?

- Advertisement -

நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒருவராக இருப்பவர் சமுத்திரக்கனி. படங்களை தயாரிக்கவும் செய்கிறார். ஒரு சமுதாய அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் சமுத்திரக்கனியை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல் முக்கிய இயக்குனர்கள், தங்களது படங்களில் சமுத்திரக்கனி நடிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் இந்தியன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு ஆடிஷனுக்கு சென்றேன். ஆனால் அப்போது எனக்கு வாய்ப்பில்லை என விரட்டி விட்டார்கள். ஆனால், இப்போது இந்தியன் 2 படத்தில் எனக்காகவே ஒரு கேரக்டரை உருவாக்கி, அதில் என்னை இயக்குனர் ஷங்கர் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று சமுத்திரக்கனி ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

- Advertisement -

அப்படி தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்துவரும் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடிக்க அதிகளவில் அழைப்புகள் வருகின்றன. ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் சமுத்திரக்கனி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் அந்தகன் படத்தின் பிரமோ நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் பிரசாந்த், கண் பார்வையற்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்துள்ளார். சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், ஊர்வசி, கேஎஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்த் அப்பா, முன்னாள் நடிகர் தியாகராஜன் டைரக்ட் செய்துள்ளார்.

- Advertisement -

அந்தகன் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது, நான் தியேட்டர் ஆபரேட்டராக பணிசெய்த காலத்தில் தியாகராஜன் நடித்த கொம்பேறி மூக்கன், மலையூர் மம்பட்டியான் படங்களை திரையில் ஓட்டியிருக்கிறேன். அதனால் அவரை திரையில் பார்த்தாலே எனக்குள் ஒரு பயம், பதட்டம் வந்துவிடும். அதனால் அவர் போன் செய்து வணக்கம் சொன்னவுடன், படப்பிடிப்புக்கு வந்துவிடுகிறேன், என்று கூறிவிட்டேன். ஆனால் படப்பிடிப்பில், அவரது பேரன்பை உணர்ந்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் ஒருமுறை, நடிகை வனிதா விஜயகுமார் என்னை கண்டபடி திட்டிக்கொண்டே இருந்தார். யாருமே என்னை திட்டாத கெட்ட வார்த்தைகளால் என்னை திட்டினார். நான் இயக்குனரை பார்த்த போது, நான் சொன்னதை கடந்தும், அவர் திட்டிக்கொண்டு இருக்கிறார் என்று கூறினார். ஆனால் வனிதா விஜயகுமாரை நான் கேட்டபோது, டைரக்டர்தான் உங்களை அப்படி எல்லாம் திட்டச் சொன்னார் என்று கூறிவிட்டார், என்று அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

சற்று முன்