- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படம் ரிலீசுக்கு பிறகு சூட்டோடு சூட்டாக அடுத்த திரைப்படத்தை இயக்கச் செல்லும் மணிரத்னம்......

தக் லைப் படம் ரிலீசுக்கு பிறகு சூட்டோடு சூட்டாக அடுத்த திரைப்படத்தை இயக்கச் செல்லும் மணிரத்னம்… மூன்றாவது முறையாக இயக்குனருடன் கைகோர்க்கும் விரல் வித்தை நாயகன்…

- Advertisement -

குறிப்பிட்ட சில இடைவேளையில் அவ்வப்போது மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருபவர் மணிரத்னம். கடல் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு அவர் இயக்கிய ஓ காதல் கண்மணி மீண்டும் அவரை ட்ரெண்ட் செட்டர் இயக்குனர் என்னும் பெயரை பெற்று கொடுத்தது. இதன் பிறகு கார்த்தியை வைத்து அவர் இயக்கிய காற்று வெளியிடை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து அரவிந்த்சாமி, அருண் விஜய், சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து அவர் இயக்கிய செக்கச் சிவந்த வானம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இதை அடுத்து யாருமே இதை பண்ண முடியாது என்று கூறி வந்த, பொன்னியின் செல்வன் நாவலையும் தழுவி திரைப்படமாக கொடுத்தார் மணிரத்னம்.

- Advertisement -

2022 ஆம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இரண்டு பாகங்கள் எடுக்கப்பட்ட சூழலில் முதல் பாகத்தின் வசூலே, இரண்டு பாகங்களுக்கான வெற்றியை தேடி கொடுத்து இருப்பதாக அப்போது பேசப்பட்டது. தொடர்ந்து 2023 ஆவது ஆண்டே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படியான சூழலில் தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைப் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்னும் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருக்க, அமரன் கதாபாத்திரத்தில் வருகிறார் சிலம்பரசன். தந்தைக்கும் வளர்ப்பு மகனுக்கும் இடையேயான மோதலைதான் இந்த திரைப்படம் கூறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

இதுபோக, திரிஷா அபிராமி நாசர் ஜோஜூ ஜார்ஜ் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். வரும் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படியான சூழலில் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது தக் லைப் வெளியானதும் மணிரத்னம் அடுத்ததாக மீண்டும் சிம்புவுடன் இணைய இருக்கிறாராம். சிலம்பரசனின் 49 வது திரைப்படம் தயாரிப்பு சிக்கல் பணிகள் காரணமாக தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. அந்த இடைவெளியில்தான் இந்த திரைப்படத்தை எடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்க உள்ளதாம். ருக்மணி வசந்த் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் மற்றும் தக் லைப் படங்களில் மணிரத்னத்துடன் இணைந்த சிம்பு தற்போது மூன்றாவது முறையாக கை கோர்த்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்