- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை மணக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா...

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை மணக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபலா – நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் நாகார்ஜூனா

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான 4 ஆண்டுகளில், 2021ல் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

எனினும் அவர்களுக்குள் மீண்டும் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் தரப்பில் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருக்கும் மத்தியில் ஒரு சுமூக உறவு மீண்டும் ஏற்படவே இல்லை. சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தார். இடையில் மயோசிடிஸ் தோல் அலர்ஜி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சைகளை பெற்றார்.

இந்நிலையில் நடிகை சோபிதா துலிபலாவுடன் நடிகர் நாக சைதன்யா அதிக நெருக்கம் காட்டி வருவதாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கு டேட்டிங் செல்வதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களும், வீடியோக்களும் பரவி வந்தன. ஆனால் துலிபலா அதுபற்றி வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. எனது நண்பர் நாக சைதன்யா என்று கூறியிருந்தார்.

விரைவில் நாக சைதன்யா, சோபிதா துலிபலாவை திருமணம் செய்துக்கொள்வார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் தரப்பில் பேசப்பட்டு வந்த நிலையில், அது இன்று உண்மையாகி விட்டது. ஐதராபாத்தில் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

இன்று காலை நடந்து முடிந்த அவர்களது நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகர்ஜூனா தனது மகிழ்ச்சியை அதில் வெளிப்படுத்தி உள்ளார். அவரது அந்த அறிவிப்பில், எனது மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9.42 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை மகிழ்ச்சியாக அறிவிக்கிறோம்.

துலிபலாவை எங்கள் குடும்பத்தில் ஒருவராக, மருமகளாக வரவேற்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். சந்தோஷமான அந்த ஜோடிக்கு எங்களது வாழ்த்துகள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறோம். கடவுள் ஆசிர்வதிப்பாராக, என அதில் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி கேரக்டரில் நடித்தவர்தான், சோபிதா துலிபலா என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்