- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாருக்கு கோவையில் கோயில் கட்டப்படுகிறதா? கோயிலுக்கு தல சுவாமி ஆலயம்ன்னு பேர் வைப்பாங்களோ? -...

நடிகர் அஜீத்குமாருக்கு கோவையில் கோயில் கட்டப்படுகிறதா? கோயிலுக்கு தல சுவாமி ஆலயம்ன்னு பேர் வைப்பாங்களோ? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

திரைப்பட நடிகர்களை கடவுளாக வழிபடும் ரசிகர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி விட்டனர். ஏற்கனவே எம்ஜிஆர் ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனை கூட ஆண்டவர் என்றுதான் அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜீத்குமாரை அரசியலுக்கு அழைக்க அனைத்து நண்பர்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வரவும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் கோவையை அடுத்துள்ள கோவூரில் விரைவில் அஜீத்துக்கு விரைவில் கோயில் கட்டவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது இணையத்தில் வைரலான நிலையில் தல சுவாமி ஆலயம் என்று பேர் வைப்பாங்களா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

சற்று முன்