- Advertisement -
Homeபொழுதுபோக்குமதுரை கதைக்களம் என்றாலே அந்த கேரக்டராக தான் இருக்கும் என்று நான் கதை கேட்கவில்லை -...

மதுரை கதைக்களம் என்றாலே அந்த கேரக்டராக தான் இருக்கும் என்று நான் கதை கேட்கவில்லை – ஓபனாக பேசிய நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வதந்தி என்ற வெப் சீரிஸ் நேரடியாக வெளியானது. இதில் எஸ்ஜே சூர்யா லைலா சஞ்சனா நாசர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த வெப் சீரிஸூக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

புஸ்கர் காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு சைமன் இசையமைத்தார். வதந்தி முதல் பாகத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து வதந்தி வெப் சீரிஸ் இரண்டாம் பாகம் வதந்தி சீசன் 2 தி மிஸ்டரி ஆஃப் மணி என்ற பெயரில் இப்போது உருவாகி உள்ளது. கிரைம் திரில்லரில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த 2வது சீசனையும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். யஷ்வந்த் அனகா மருதோரா அபர்ணா தாமஸ் விவேக் பிரசன்னா ரேவதி சர்மா மற்றும் அர்ஜூன் நந்தகுமார் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். வதந்தி 2 வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் நடித்திருக்கிறார்.

மொத்தம் 8 எபிசோட்களை கொண்ட வதந்தி 2 வெப் சீரிஸ் வருகிற 7ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வதந்தி 2 வெப் சீரிஸ்சை புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் வதந்தி 2 வெப் தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, நான் இதுவரை மொத்தம் 30 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை போலீஸ் கேரக்டரில் யோசிக்கவே இல்லை. முதன் முதலில் போலீஸ் கேரக்டரில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கூறிய போது என்னால் நம்பவே முடியவில்லை.

ஏனெனில் மதுரையை சார்ந்த கதைக்களம் என்றாலே எங்களை திரையில் ரவுடிகளாக தான் காட்டுவார்கள். போலீஸ் கேரக்டர் என்று சொன்ன பிறகுதான் கதையையே கேட்க ஆரம்பித்தேன். கதை மிகவும் பிடித்து விட்டது. அதனால் வதந்தி 2 தொடரில் நடித்தேன் என்று நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்